My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

சிமென்ட் வாங்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்கள்

Which cement is best for construction

0 285

Get real time updates directly on you device, subscribe now.

ன்றைய காலகட்டத்தில் அமைக்கப்படும் கட்டிடங்களில் சிமெண்டின் பங்கு முக்கியமானதாக உள்ளது. சிமெண்டானது அதன் உபயோகத்துக்கு தக்க விதத்தில் வெவ்வேறு கிரேடுகள் கொண்டதாகவும், பல்வேறு வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

பொதுவாக, கட்டுமான அமைப்புகளில் பயன்படுத்தும் சிமெண்டு வகைகளில் பி.பி.சி எனப்படும் போர்ட்லேன்ட் பொசலோனா சிமெண்டு (PPC) முக்கியமானது.

இயற்கை பாதுகாப்பு

அனல் மின் நிலையங்களில் இருந்து பிளை ஆஷ் எனும் பொசலோன் பொருளை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. அதில் உள்ள ‘ரியாக்டிவ் சிலிக்கா’ என்ற வேதிப்பொருள் கான்கிரீட்டுக்கு வலிமை சேர்ப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும், சிமெண்டு தயாரிப்பில் பிளை ஆஷ் பயன்படுவதால், மாசு கட்டுப்பாட்டுக்கு உதவியாக இருப்பதோடு, புவி வெப்ப மயமாதலையும் பெருமளவு குறைக்கிறது.

துரு தடுப்பு

ஓ.பி.சி என்ற ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்டு என்பது கான்கிரீட்டில் விரைவாக உறுதியை கட்டமைக்கும் தன்மை கொண்

டதாக இருந்தாலும், கட்டுமானங்களின் நீடித்த ஆயுள் மற்றும் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை ஒப்பிடும் பட்சத்தில் பி.பி.சி என்ற போர்ட்லேண்ட் பொசலோனா சிமெண்டு நல்ல பலன்களை தரக்கூடியது என்று தொழில் நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், இவ்வகை வகை சிமெண்டு மூலம் அமைக்கப்பட்ட கான்கிரீட் அடர்த்தியாக இருப்பதோடு, எளிதாக நீர் ஊடுருவும் தன்மையும் (permeability) குறைவு என்ற நிலையில், இரும்பு கம்பிகள் துரு பிடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கான்கிரீட் அரிப்பு

பொதுவாக, சிமெண்டு கட்டுமானங்களில் ஏற்படும் சிறிய வெடிப்புகள் மற்றும் நுண்துளைகள் மூலம் நீர், மாசு மற்றும் காற்றில் கலந்துள்ள ரசாயன வாயுக்கள் ஆகியவை உள்ளே நுழைந்து, கசிவு மற்றும் அரிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. கான்கிரீட்டில் உள்ள கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற வேதிப்பொருள், நுண் துளைகள், வெடிப்புகள் வழியாக கசிந்து கான்கிரீட்டின் மேற்பரப்பிற்கு வருகிறது. அது, காய்ந்து வெண்மை நிறத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடு (சுண்ணாம்பு) மற்றும் கால்சியம் கார்போனேட் ஆகியவற்றை உருவாக்குகிறது. அதனால், கான்கிரீட் அரிக்கப்பட்டு படிப்படியாக சிதைகிறது. இதை தடுப்பதற்கு, கால்சியம் சிலிக்கேட் அல்லது ஹைட்ரேட் கூடுதலாக உள்ள சிமெண்டு வகைகளை பயன்படுத்தலாம்.

தொடக்க நிலை இறுகும் நேரம்

சிமெண்ட்டில் நீர் சேர்த்தவுடன் வேதிவினை தொடங்கிவிடுவதோடு, குறிப்பிட்ட நேரம் வரை நெகிழ்வான நிலையில் இருப்பதால், தேவையான வடிவங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. சிமெண்டு கலவை கலப்பது, எடுத்து சென்று பணிகளை செய்வது ஆகியவற்றை தொடக்க நிலை இறுகும் நேரத்திற்குள் செய்வது முக்கியம். அதன் பிறகு, சிமெண்டு கலவையில் அசைவுகள் மற்றும் அதிர்வுகள் ஏற்படக்கூடாது.

இந்திய தர நிர்ணய விதிகளின்படி சிமெண்டுக்கான தொடக்க நிலை இறுகும் நேரம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் என்றாலும், இந்திய தட்ப வெட்ப நிலை மற்றும் கலவையை கலக்குதல், பூசுதல், கான்கிரீட் போடுதல் ஆகிய பயன்பாட்டு நேரங்களை கருத்தில் கொண்டு, சிமெண்டு பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செட் ஆகாமல் இருக்கும் சிமெண்டு வகைகளும் சந்தையில் கிடைக்கின்றன.

இறுதி நிலை இறுகும் நேரம்

சிமெண்டு கலவை தனது நெகிழ்வு தன்மையிலிருந்து மாறியது முதல் இறுதி இறு

கும் நேரம் தொடங்குகிறது. அதன் பிறகு சிமென்ட் கலவை படிப்படியாக கடினமான தன்மைக்கு மாறுகிறது. இந்திய தர நிர்ணயத்தின்படி சிமெண்டின் இறுதி நிலை இறுகும் நேரம் அதிகபட்சமாக 600 நிமிடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், 300 நிமிடங்களுக்குள் செட் ஆகும் சிமெண்டு வகைகளும் இப்போது கிடைக்கின்றன.

சிமெண்டின் வலிமை

சிமெண்டின் கன பரிமாணங்கள் மாறாமல், ஒரே தன்மையில் இருப்பது உறுதி நிலை (soundness) ஆகும். அந்த நிலையில் சிமெண்டு கலவை விரிவடைந்தால், அதில் விரிசல்கள் ஏற்படும். எனவே, இறுகிய சிமெண்டு கலவை கன பரிமாணம் மாறக்கூடாது. இந்திய தர நிர்ணயத்தின்படி 10 மில்லிமீட்டருக்கு மேல் விரிசல்கள் இருக்கக்கூடாது.

1. சிமென்டில் வெவ்வேறு கிரேட்கள் உள்ளன. அதன் மென்மைத் தன்மையை வைத்தே இத்தகைய (33,43,53) கிரேட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கிரேட் அடிப்படையில் தரம் வேறுபடுவது இல்லை.

2. கட்டடத்தில் காலம் அமைப்பது, தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகலுக்கு 53 கிரேடு சிமெண்ட் பயன்படுத்தலாம். பூச்சு வேலைக்கு, 43 கிரேடு சிமெண்டை பயன்படுத்தலாம்.

3. சிமெண்ட் வாங்கும் போது, நம்பத்தகுந்த வியாபாரியிடம் இருந்து, புதிய மூட்டைகளாக வாங்க வேண்டும். மொத்தமாக வாங்கி நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவது கூடாது. மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கப்பட்ட சிமென்டை, 20 சதவீத உறுதித்தன்மையை அளிக்கும் சேமித்து வைக்கப்படும் காலம் அதிகரித்தால், அதற்கேற்ப அதன் உறுதித்தன்மையும் படிப்படியாக குறையும்.

4. நீங்கள் வாங்கும் சிமெண்ட் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை விட, அது தரமானதா, எப்போது தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

5. எந்த நிறுவன தயாரிப்பாக இருந்தாலும், மூட்டையை திறந்ததில் இருந்து, ஆறு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதன் பின்னும் திறந்திருந்தால், அதில் வெளிக்காற்றில் உள்ள ஈரப்பதம் சிமென்டின் உலர் தன்மையை பாதிக்கும்.

Comments
Loading...