My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

வீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு ?

What is the cost for building construction per square feet

0 2,047

Get real time updates directly on you device, subscribe now.

வீடு கட்ட வேண்டும் என முடிவு எடுத்த உடனே அனைவரும் வரும் அடுத்த கேள்வி இப்ப சதுரடிக்கு என்ன ரேட் ?

வீடு கட்டுவோர்க்கு மட்டுமல்ல நீங்கள் வீடு காட்டுகிறீர்கள் என்றால்  சந்திக்கும் அனைவரும் கேட்கும் கேள்வியும் இதுவே “சதுரடிக்கு என்ன ரேட்டுக்கு பேசியிருக்கீங்க ?”

முந்தைய பதிவு : வீட்டு கடன் பெறுவது எப்படி ?

அது என்ன சதுரடி ரேட், சதுரடி ரேட்டில் எதுவெல்லாம் வரும், எதுவெல்லாம் வராது ? குறைவான  ரேட் கேட்பவர்கள் நல்லவர்களா ? அல்லது அதிக விலை கேட்பவர்கள்தான்  சிறந்த தரத்துடன் கட்டி தருவார்களா ? இப்படி பல கேள்விகளுக்கு இங்கே விடை தேடுவோம்…

சதுரடி ரேட் என்றால் என்ன ?

ஒரு வீடு  கட்ட நாம் உத்தேசித்தவுடன் நாம் முடிவு செய்வது எத்தனை சதுரடியில் கட்டவேண்டும் என்பதே அதுதான் நமது முதல் வேலையும் கூட.  எத்தனை சதுரடியில் வீடு கட்ட வேண்டும் என முடிவு எடுத்தால் தான் நமது பட்ஜெட்டை முடிவு செய்ய முடியும்.  அப்படி மொத்த சதுரடியை  கண்டு பிடித்த பிறகு ஒரு சதுரடிக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்துவிட்டால் நமக்கு மொத்த பட்ஜெட் கிடைத்து விடும் அல்லவா ?

கட்டிடத்தின் மொத்த சதுரடி என்பது ரூம்களின் பரப்பு  மற்றும்  சுவர்களின் கணம் இரண்டும் சேர்த்து கிடைக்கும் மொத்த பரப்பளவே கட்டிடத்தின் சதுரடி, அதுவே பிளிந்த் பரப்பு என்பர்.  அதாவது நீளத்தில் வரிசையாக வரும் ரூம்களின் நீளம் மற்றும் இடையில் மற்றும் கடைசியில் வரும் சுவர்களின் கணம் ஆகியவற்றை அதேபோல் அகலத்தில் வரும் அளவோடு பெருக்கி கிடைக்கும் அளவே பிளிந்த் பரப்பு.

முந்தைய பதிவு : போர்வெல் போடும்போது கவனிக்க வேண்டியவை

சதுரடி ரேட் என்பது வீட்டின் பரப்பளவில் ஒரு சதுரடி அளவுக்கு ஆகும் மொத்த செலவு இது.  இது கட்டிடத்தின் மொத்த செலவை மொத்த சதுரடியால் வகுக்க கிடைப்பது.  அதாவது ஒரு சதுரடி விலையில் அனைத்து வேலைகளும் அடங்கும் அஸ்திவாரம் தோண்டுவது முதல் கட்டுமானம், பூச்சு, பெயிண்டிங் என அனைத்தும் வரும். இதில் விலை விகிதங்களுக்கு ஏற்ப சில வேலைகள் விடுபடும்.

 

சுற்றிலும் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு மேல் போடும் சன்ஷேடு இரண்டு அடிக்கு அதிகமாக இருக்காமல் இருந்தால் அவைகளை கணக்கில் எடுக்க தேவை இல்லை.  இரண்டு அடிக்கு மேல் இருந்தால் அவைகளை பீஸ் ஒர்க்கில் கணக்கிட வேண்டும்.

முந்தைய பதிவு : வீடு கட்டும் முன் நாமே கட்டுமானத் தொகை தயாரிப்பது எப்படி ?

படிகள் மற்றும் போர்டிகோ போன்றவற்றை  தனியாக கணக்கிட வேண்டும்.

இரண்டு மூன்று மாடிகள் என்றால் தனித் தனியாக கணக்கிட வேண்டும்.

இந்த சதுரடி ரேட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இதில் பல விஷயங்கள் உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

  1. வீட்டின் நீளம் மற்றும் அகலம் சரியாக கணக்கிடப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும்.
  2. ஒரு சிலர் கான்கிரீட் பரப்பு அளவையே கணக்கிடுவர் அவற்றை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
  3. படியை 100 சதுரடி என எடுத்து கொள்வர்.
  4. என்ன வேலைகள்  எல்லாம் இந்த ரேட்டில் அடங்கும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
  5. விடுபட்ட வேலைகள் செய்ய என்ன செலவு வரும் என தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நமக்கு முழுக்கியான பட்ஜெட் கிடைக்கும்.

முந்தைய பதிவு : வீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

சதுரடி ரேட் முறை சரியானதா ?

சதுரடி முறை பரவலாக  அனைத்து பகுதிகளிலும் பழக்கத்தில் உள்ளது.  நமக்கு சதுரடி கணக்கிடுவது சுலபம் என்பதால் அதன் தொகை தெரிந்தால் நமக்கு மொத்த தொகை கணக்கிடுவது மிக எளிது என்பதாலேயே இந்த முறையை நாம் தேர்ந்து எடுக்கிறோம்.

ஆனால் இது ஒரே மாதிரியான வீடுகளை கட்டும்போது மட்டுமே கடைபிடிக்க வேண்டிய முறையாகம்.   இந்த முறையில் சரியான மதிப்பீடு செய்வது மிக சிரமம்.

நம் வீடும் பக்கத்து வீடும் எந்த விதத்திலும் ஒரே மாதிரி இல்லாத போது ரேட் மட்டும் எப்படி ஒத்திருக்க முடியும்.  இதில் பல விஷயங்கள் அடங்கும் அஸ்திவாரம் ஆழம், பேஸ்மெண்ட் உயரம், சுவர்களின் எண்ணிக்கை, அறைகளின் நீள, அகலம், கூரையின் உயரம், செங்கல்களின் தரம், கூரையின் தடிமன், பூச்சின் தரம், பெயிண்டிங் போன்ற எத்தனையோ காரணிகள் ஒரு வீட்டின் கட்டுமான செலவை நிர்ணயிக்கின்றன.  இது ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வீட்டிற்குமே மாறுபடும்போது, அதன் விலை மட்டும் எப்படி ஒத்திருக்க முடியும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் உள்ள படத்தில் இரண்டு  அறைகளாக  உள்ளது இரண்டாவதில் ஒரு அறையாக  உள்ளது இரண்டும் ஒரே சதுரடிதான் ஆனால் முதலாவது படத்தில் ஒரு சுவர் அதில் ஒரு கதவு அதிகமாக உள்ளது  அவற்றுக்கான செலவு கூடும்தானே அப்போ இரண்டுக்கும் எப்படி ஒரே செலவு வரும்.

சின்ன சின்ன அறைகளாக இருந்தால் செலவு கூட வரும் பெரிய பெரிய ரூமாக இருந்தால் செலவு குறைவாக வரும்.  ஆனால் உல்ட்டாவாக பட்ஜெட்டில் கட்டுபவர்கள்தான் குறைந்த பரப்பு இடத்தில் அதிக சுவர்களை வைத்து அதிக அறைகளை அமைக்கின்றனர்.

ஒப்பந்தக்காரர் போட்டியாளர்களை சமாளிக்க குறைந்த விலையை சொல்கிறார் ஆனால் சிறு சிறு அறைகள்,அதிக சுவர்கள், அதிக அளவிலான பாத்ரூம்கள் போன்ற செலவு கூடும் வசதிகளால் அவரால் அதை செய்து முடிக்கா நிலைக்கு தள்ளப்படுகிறார் அதை சமாளிக்க கடைசியில் அவர் இந்த வேலையை நான் இந்த விலையில் சேர்க்கவில்லை  சில வேலைகளை ஒதுக்குகிறார்.  கடைசி வேளையில் இப்படி சொல்லும்போது வீட்டின் உரிமையாளரும் அந்த எதிர்பாராத செலவை ஏற்க முடியாமல் திகைக்கிறார் பின்பு என்ன சண்டையில்தான் முடியும்.

எனவே இது சரியான முறை கிடையாது,  ஆனால் அதை முறைப்படுத்த முதலில் உங்கள் வீட்டின் வரைபடத்தை பொறியாளர் மூலம் தயார்  செய்யுங்கள் பின் அவற்றை ஒப்பந்தக்காரரிடம் கொடுத்து அதற்க்கு விலை கேளுங்கள் அல்லது பொறியாளரிடமே இதற்கான மதிப்பீடு தயார் செய்து கொடுக்க சொல்லி அந்த தொகையை ஒப்பந்தக்காரரிடம் பேசி முடியுங்கள்.

அவற்றில் அனைத்து வேலைகளையும் உள்ளடக்குங்கள், அப்போதுதான் முழு மதிப்பீடு கிடைக்கும் நீங்களும் பணம் தயார் செய்ய முடியும்.  ஒருவேளை ஒரு சில வேலைகளை ஒப்பந்தக்காரர் ஒதுக்குகிறார் என்றால் அவற்றைசெய்பவர்களை அணுகி அவர்களிடமும் ஒப்பந்தமோ அல்லது தோராய மதிப்பீடோ தயார் செய்து கொள்ளுங்கள் உதாரணமாக எலெக்ட்ரிக்கல் வேலை, கார்பெண்டர் வேலை, பெயிண்டிங் வேலை போன்றவை.

முக்கியமாக எலிவேஷன் வேலைகள் ஒப்பந்தக்காரர் தனது ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார், அவற்றிற்கான செலவை தோராயமாக கேட்டு கணக்கிட்டு சொல்லுங்கள்.  உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் சுருக்கி கொள்ளுங்கள்.

தோராயமாக நகரத்தில் இப்போது 10’0″x16’0″ ரூம் அளவுகள் உள்ள வீட்டிற்கு சதுரடிக்கு  ரூ.2000 வரை வாங்குகின்றனர்.

முடிந்த அளவு பாத்ரூம்களை குறையுங்கள் ரூமுக்கு ஒரு அட்டாச், பொது பாத்ரூம் அப்புறம் வெளியில் ஒரு பாத்ரூம் என அதிக அளவில் பாத்ரூம்களை அமைக்காதீர்கள்.  இது உங்களுக்கு செலவை மட்டுமல்ல சுத்தம் செய்யும் வேலைகளையும் அதிகமாக்கும். தண்ணீர் செலவையும், பைப்லைன் செலவுகளையும் அதிகமாக்கும்.

முடிவாக சதுரடி விலையை உங்கள் வீட்டின் வரைபடத்தை வைத்து ஒவ்வொரு வேலைகளையும் துல்லியமாக கணக்கிட்டு பின் நிர்ணயிங்கள்.  வெற்றிகரமாக உங்கள் வீட்டை கட்டி சந்தோசமாக குடியேறுங்கள்.

Comments
Loading...