My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

சிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்

Regular works of Civil Supervisors at Construction Site

0 202

Get real time updates directly on you device, subscribe now.

சிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள் :

 •   சிவில் சூபர்வைசருடைய முக்கியப் பணி என்னவெனில் கட்டடப் பொறியாளருக்கு அவர் உதவியாக இயங்க வேண்டும். எந்தெந்த வேலைகளை எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும்.அதன்படி வேலைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்ய வேண்டும் .

 

 •     ஒரு சிவில் சூபர்வைசரின் பணி எப்போது தொடங்குகிறது என்றால் இன்றைய வேலை நேற்றே ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் நாளைய வேலைகளையும் இன்றே முடித்தாக வேண்டி வரலாம்.

 

 •      நாளைக்கு எந்த இடத்தில் வேலைஎத்தனை கொத்தனார்சித்தாள்மண்வெட்டி ஆள் தேவைப்படும்?  கட்டுமானப் பொருட்கள் தயார் நிலையில் இருப்பு க்கப்பட்டிருக்கின்றனவாவேலை தொடங்கும் நேரத்தில்தான் வந்து சேருமாஇயந்திரங்கள் எல்லாம் இயங்கும் நிலையில் இருக்கின்றனவாவெளியில் இருந்து கொண்டு வர வேண்டுமா?சொந்த இயந்திரங்களா?வாடகைக்குப் பெற வேண்டுமா?எவ்வளவு நேரம் இயக்கப்பட வேண்டும்?

 

 • வாடகைகூலிபோக்குவரத்துஎரிபொருள் எவ்வளவு ஆகும்?ஆட்களுக்கான கூலி எப்போது பட்டுவாடா செய்யப்பட வேண்டும்?போதுமான பணம் இருப்பில் இருக்கிறதா?வங்கிக்குப் போய் எடுத்து வர வேண்டுமா?கட்டுமானப் பொருட்களைக் கடனுக்குப் பெற முடியுமா?எத்தனை நாள் கடன் தருவார்கள்?தேவைப்படும் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க இட வசதி இருக்கிறதா?பொருட்கள் வைக்கப்படும் இடத்திற்குக் காவலர்களை ஏற்பாடு செய்ய வேண்டுமா?நாளை வேலைக்கான முன்னேற்பாடுகள் எல்லாம் தயாராக இருக்கின்றனவா?ஏதாவது எதிர்பாராத தடங்கல் வருமாவந்தால் எப்படிச் சமாளிப்பதுமாற்று ஏற்பாடுகள் என்னென்னகொடுத்துத் தீர்க்க வேண்டிய பாக்கிகளுக்கான தவணை எப்போது?கொள்முதல் செய்வதற்கு ஏற்ற காலம் எதுநிபந்தனைகள் என்னென்ன?வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?

 

 • தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட பயிற்சிகளை வழங்க வேண்டி இருக்கிறதா?அதற்கான வசதிகள் கிடைக்கின்றனவா?

 

 • தங்கு தடையில்லாமல் ஆட்களும் பொருட்களும் கிடைக்கும் நிலை உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?இப்படி எத்தனையோ கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். அதுவும் மறுநாள் வேலைகள் தொடங்குவதற்கு முன்பாகவே எல்லாம் தயாராக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

 • கடைசி நேரத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கக் கூடாது. ஒரு வேலை ஆகாது போல் தெரிந்தால் மற்றொரு வேலையைத் தொடர வாய்ப்பு இருக்க வேண்டும். ஆட்களைச் சும்மா நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும்.சுருக்கமாகச் சொல்வதானால் பம்பரமாகச் சுற்றிச்சுழல வேண்டும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன தெரியுமாபெரும்பாலான வேலைகளை நீங்களேதான் செய்ய வேண்டும் என்பதில்லை.

தொழில் திறன்  தேவைப்படும் பணிகள்:

 

 • சிவில் சூபர்வைசர் என்பவருக்கு இன்னதுதான் வேலை என்று வரையறை செய்வது கடினம். ஏறக்குறையக் கட்டுமானம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் அச்சாணி போன்றவர் இவர்.நிலம் தொடர்பான தொழில்நுட்ப அஷூவு சிவில் சூபர்வைசர்களுக்கு அவசியம் இருந்தாக வேண்டும். சுற்றுச் சூழல் குறித்த விதிமுறைகள்தடுப்பு நடவடிக்கைகள் தெரிந்திருக்க வேண்டும்.

 

 • எழிற் கட்டடக் கலை எனப்படும் ஆர்க்கிடெக்சர் தொடர்பான திறமைகளும் இருப்பது வரவேற்கத் தக்கதே.பொஷூயியல் பின்னணி உள்ளவர்கள் இதில் எளிதாகச் சமாளித்துக் கொள்ளலாம். அந்தத் தகுதி இல்லாதவர்கள் சொந்த முயற்சியிலோ பகுதி நேரப் படிப்புகளின் வாயிலாகவோ தகுதியை வளர்த்துக் கொள்வது முக்கியம்.

 

 • கட்டுமானத் தொழிலின் பல்வேறு தேவைகள் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஒரு கட்டடம் கட்டி முடிக்க ப்பட்டுவிட்டால் அத்துடன் சிவில் சூபர்வைசருக்கு வேலை முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அதற்குப் பின் அந்த வளாகத்தை அழகான புல்வெளிகள்தோட்டங்களை அமைத்துப் பராமரிப்பதும் இவரது வேலையில் சேரும்.

 

 • பொதுவாகப் பல ஒப்பந்தக்காரர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் பெற்ற ஒப்பந்தங்களைத் துணை ஒப்பந்ததாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்திருப்பார்கள்.எந்தெந்த ஒப்பந்தக்காரர்கள் எப்படியெப்படிச் செயல்படுகிறார்கள் என்பது குறித்த பொதுவான விவரங்கள் சிவில் சூபர்வைசரின் விரல் நுனியில் இருக்க வேண்டும்.எந்த வேலை யாரை நம்பி ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் அந்த வேலைகள் விதிமுறைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றனவா என்று பார்க்க வேண்டியதும் சிவில் சூபர்வைசரின் கடமை.

 

 • ஒப்பந்தக்காரர்களில் வேண்டியவர்வேண்டாதவர் என்ற பாகுபாடு கூடாது. ரொம்பவும் நெருங்கிப் பழகினால் அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பார்கள்.ஒரு நல்ல சிவில் சூபர்வைசர் இதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது. பாரபட்ச மற்ற முறையில் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும். சில மோசடி ஒப்பந்தக்காரர்கள் சிவில் சூபர்வைசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டால் நமது சவுகரியத்துக்குக் கலவை விகிதங்களைக் கையாளலாம் என்பது மாதிரி நடந்து கொள்வார்கள். அத்தகையவர்களை மிக மிக உன்னிப்பாகக் கண்காணித்துக் கட்டுமானத்தின் தரம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

யாருக்காக உழைக்க வேண்டும்?

 • கட்டட உரிமையாளர் எங்கோ இருப்பார். அவரது பிரதிநிதியாக சிவில் சூபர்வைசர்தான் களத்தில் இருப்பார். இடத்தின் சொந்தக்காரர் அங்கே இருந்தால் கட்டுமான வேலைகளை எவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்வாரோ அதே அளவு பொறுப்புடன் சிவில் சூபர்வைசர் பணியாற்ற வேண்டும்.

 

 • ஒரு கட்டடம் கட்டப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவரையப்பட்டு இருக்கும். அவற்றைப் பற்றிய தெளிவான அறிவு சிவில் சூபர்வைசருக்கு இருக்க வேண்டும். கட்டுமானப் பொருள் ஒவ்வொன்றும் இன்ன மாதிரியான தரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள் .கொள்முதல் செய்து பயன் படுத்தப்படும் பொருட்கள் அத்தகைய தரத்தில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தனை நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டாக வேண்டும் என்று வரையறை செய்திருப்பார்கள். இதனால் சரியான கால அட்டவணைப்படி நடக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 • சில வேலைகள் புதிதாகக் கட்டடம் கட்டுவதற்கானவையாக இருக்கும். வேறு சில வேலைகள்இருக்கிற கட்டடத்தை இடம் மாற்றி அமைக்க வேண்டியதாக வரலாம். பழைய கட்டடங்களைத் தேவைக்கேற்பப் புதுப்பித்துக் கட்ட வேண்டி இருக்கலாம். இவற்றிற்கெல்லாம் எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடத் தெரிந்திருக்க வேண்டியதும் சிவில் சூபர்வைசரின் வேலையில் அடங்கும். பெரிய அதிகாரிகள் முதல் தினக் கூலித் தொழிலாளர்கள் வரை எல்லாரையும் ஒரே நோக்கத்திற்காக உழைக்க வைப்பதில்தான் சிவில் சூபர்வைசரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

ஒருங்கிணைப்பு முக்கியம்:

 • நீங்கள் ஒரு சிவில் சூபர்வைசர் என்றால் நீங்கள் பல பெரிய தொழில்நுட்ப அறிஞர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஆலோசகர்கள் இருப்பார்கள்.வெளி நிறுவனங்கள்வெளி ஊர்கள் என்றும் போய்வர வேண்டி வரும். கட்டுமானப் பணிகள் ஒரே ஊரில்,ஒரே இடத்தில் நடக்கப் போவது இல்லை. பல இடங்களுக்குப் போக வேண்டி இருக்கும்.இதற்கெல்லாம் சளைக்காத மனப்பக்குவம் கொண்டவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு வசதிப்பட்ட நேரங்களில்தான் வந்து பார்க்கச் சொல்வார்கள். அந்தக் காலக் கெடுவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

 

 • ஆட்களை மேய்க்க ஒரு சிவில் சூபர்வைசர் தன்னை விடத் திறமை குறைவானவர்கள் முதற்கொண்டு அதிகத் திறமை கொண்டவர்கள் வரை பலரையும் வேலை வாங்க வேண்டி இருக்கும். இதில் மனித உறவுகளைக் கையாளும் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.அதிகம் படிப்பறிவில்லாதவர்கள் சட்டென்று வேலைகளை அப்படியப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ரொம்பவும் திறமைசாலிகள் நீங்கள் அவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளவில்லை என்று இழுத்தடிப்பார்கள்.எல்லாருக்கும் நீங்கள் நல்ல பிள்ளையாக நடப்பது என்பது இயலாதுதான்.

 

 • ஆனால் அவ்வாறு நடந்து கொண்டு வேலைகளில் எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்து கொடுத்தால்தான் உங்களுக்கு வரவேற்பு அதிகமாகும்.எந்தத் திறமை கொண்டவர்கள் எத்தனை பேர் வேண்டும் என்று கேட்டுப் பெறுவதே பெரிய திறமைதான். இதில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களைச் சரியானபடி பொறுக்கி எடுக்க வேண்டும்.வேலையாட்கள் எல்லாரையும் உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்து வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரே கண்டிப்பும் கறாராய் இருந்தால்தான் வேலை ஆகும் என்று நினைப்பது தவறு.தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் போது தொழிலாளர்கள் அவர்களது சக்திக்கு மீறிய விதத்தில் உழைப்பை நல்குவார்கள்.

 

 • தொடர்பாளர் வேலைகள் நீங்கள் ஒரு மக்கள் தொடர்பாளரைப் போலவும் பணியாற்ற வேண்டும். லியாசன் ஆபிசர் என்பார்கள். சின்னதாய் ஊராட்சி ஒன்றியம் தொடங்கி மாநகர வளர்ச்சிக் குழுமம் வரை எங்கெங்கோ,யார்யாரிடமோ அலைந்து திரிய வேண்டி இருக்கும். அவர்களை எப்படிச் சந்தித்து வேலைகளை முடிப்பது என்பதில் உங்கள் அனுபவம் உதவிக்கு வரும்.ஒன்றிரண்டு வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள் என்றால் அப்புறம் எல்லாவற்றையும் எளிதாகச் செய்துவிடுவீர்கள். இதற்கு முன் உங்களது பணியைச் செய்தவர்களின் அணுகுமுறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

 • வேலையாட்களை எப்படித் தேர்ந்தெடுப்பதுவிதிமுறைகள் என்னென்னகூலி விவரங்கள்பணித் தன்மை போன்றவை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்.வெவ்வேறு ஊர்கள்மாநிலங்கள்நாடுகள் என்று வேலைகள் பரவலாகும் போது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.இதில் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்கக் கூடாது. இது பின்னாளில் பெரும் வெட்டிச் செலவுகளை ஏற்படுத்திவிடும். காலதாமதமும் ஏற்பட்டுவிடும். பொதுப் பயன்பாட்டிற்கான பள்ளிகள்,அலுவலகங்கள் போன்றவற்றைக் கட்டும் வேலையாக இருந்தால் இன்னும் விவரமாக அணுக வேண்டும்.
Comments
Loading...