My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

அத்தியாயம் 4: வரைபடம் தயார் செய்தல் மற்றும் திட்டமிடல்

Prepare plan and budget for dream house

0 327

Get real time updates directly on you device, subscribe now.

சொந்த வீட்டு கனவுடன் இடம் வாங்கி போட்டாச்சு விலைவாசியை நினைச்சா பயமா இருக்கு, நம்ம பட்ஜெட்குள்ள வீடு கட்ட முடியுமா ? கடனை வாங்கியாவது வீட்டை கட்டிரனும்னு ஒரே குறிக்கோளோட இருக்கோம் எல்லாம் நல்ல படியா முடியனும்  … முடியுமா?

முடியும் கட்டாயம் முடியும் …

கட்டிடம்  கட்டுவது என்பது கொஞ்சம் சுலபமான வேலை இல்லதான்… கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டி பாருன்னு பெரியவர்களும் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்…  ரொம்ப கஷ்டமா ?

அதெல்லாம் இல்லைங்க சரியாக  பிளான் பண்ணி பண்ணா ரொம்ப சுலபம்ங்க, நல்ல கேட்டுக்கங்க “சரியாக பிளான் பண்ணி” .  இதுக்கு பல அர்த்தம் இருக்குங்க, பிளான் பண்ணி என்பது வீட்டு வரைபடத்தை மட்டுமல்லங்க, கட்டிடத்தில் நாம் வைக்கும் முதல் செங்கல்  முதல் கடைசியில் அடிக்க கூடிய கலர் வரை நடக்க கூடிய அனைத்து செயல்களையும், செலவுகளையும் அழகா பிளான் பண்ணனும் அதுதாங்க கட்டிடம் கட்டுறதுக்கு மந்திரம்.

பெரிய பெரிய கட்டிட நிறுவனங்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் அமைத்து சிறப்பா வேலை செய்வாங்க அதனாலேயே அவர்களால் சரியான நேரத்தில் எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டா இருந்தாலும் முடிச்சிருவாங்க.

அதுக்காக நாமளும் தனி தனி டிபார்ட்மெண்ட் பிரிக்கனும்னு  சொல்லல அவங்கள மாதிரி சரியான திட்டமிடல் செய்ய வேண்டும் என்கிறேன்.

அவைகள் என்ன என்று பார்ப்போமா :

1.தேவைகளை பட்டியலிடுதல் :

கட்டிடம் கட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்த உடனே நாம் செய்ய வேண்டியது அந்த கட்டிடத்தில் நமக்கு என்ன என்ன வசதிகள் தேவை என்பதுதான்.  அவைகளை முதலில் ஒரு பட்டியலாக தயார் செய்ய வேண்டும்.  பின் அவற்றில் நமக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் இருந்தால் நல்லது என இரண்டு வகைகளாக பிரித்து வைத்து கொள்ள வேண்டும். தேவைகளை கணக்கிடும் போது எதிர்கால தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அதாவது குறைந்தது ஒரு படுக்கை அறையாவது பாத்ரூமுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் வயதானபின் பாத்ரூம் செல்வது சிரமமாகிவிட கூடாது. (நிறைய வீடுகளில் பாத்ரூம்கள் திரும்ப திரும்ப மாற்றி அமைப்பதை பார்த்திருக்கிறோம் அல்லவா)  அதே மாதிரி வெஸ்டர்ன் டாய்லெட் கோப்பை ஒன்றாவது இருக்க வேண்டும்.(இதுவும் வயதானவர்களுக்காகதான்).  நம் இடத்திற்கு தகுந்தாற்போல் தேவைகளை நிர்ணயிங்கள்.  பின் மேஸ்திரியிடமோ அல்லது பொறியாளரிடமோ சொல்லி அதற்கேற்றாற்போல் வரைபடம் தாயார் செய்ய சொல்லுங்கள்.  நீங்களே கூட வரைபடம் தயார் செய்யலாம் அதற்க்கு சுலபமான நிறைய செயலிகள் உள்ளன ஸ்மார்ட் ட்ரா என்ற ஒரு சாப்ட்வேர் கூட மிக சுலபமானதுதான்.

முதலில் அத்தியாவசிய தேவை அறைகள் அனைத்தையும் வரைபடத்திற்குள் கொண்டு வாருங்கள் அதன்பின் இரண்டாம் பட்ச அறைகளை சேர்த்திடுங்கள்.

கட்டிட  அமைப்பில்  சிக்கனத்திற்கும், ஆரோக்கியத்திற்கும்  சில டிப்ஸ் :

 1. கிட்சன் மற்றும் டைனிங் என்று தனி தனியாக இடம் ஒதுக்க வேண்டாம் கிட்சனிலேயே ஒரு ஸ்லாப் வைத்து நிலையான டேபிள் அமைக்கலாம்.
 2. முடிந்த அளவு ஹாலை நடுவில் அமைத்து அனைத்து ரூம்களும் அதிலிருந்து நேரடியாக செல்லுமாறு அமைத்தால் தேவையில்லாமல் Passage இடம் விட வேண்டியதில்லை
 3. அறைக்கு ஒரு பாத்ரூம் அமைக்காமல் வீட்டிலிருப்போரின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு ஏற்ப மட்டும் அமைக்கவும். (ஏனென்றால் ஒரு பாத்ரூமுக்கு மட்டும் டைல்ஸ், டாய்லெட் கோப்பை, தண்ணீர் பைப்கள், டேப்கள், சுடுதண்ணீர் ஹீட்டர், சுடுதண்ணீர் மிக்ஸர், கண்ணாடி வாஷ்பேசின் என எல்லாவற்றுக்கும் சேர்த்து குறைந்தது 40000 செலவு ஆகும்)
 4. அதிக பாத்ரூம் அதிக தண்ணீர் செலவை கொடுக்கும் அதிக தண்ணீர் செலவு அதிக மின்சார செலவை கொடுக்கும்.
 5. முடிந்த அளவு பெரிய ரூம்களாக அமையுங்கள் சிறு சிறு அறைகளாக பிரித்தால் நிச்சயம் செலவு அதிகம் ஆகும்.
 6. மேல் மாடிக்கு செல்லும் படியை முன் கூட்டியே திட்டமிட்டு விடுங்கள் கட்டும் போது பார்த்து கொள்ளலாம் என்றால் நிச்சயம் போதிய இடம் கிடைக்காமல் அவதிப்படுவீர்கள்
 7. கதவு நிலைகள் நேருக்கு நேர் வைத்து காற்றை சுலபமாக நம் வீட்டை கடக்க செய்யுங்கள்
 8. சூரிய ஒளி நன்கு நம் வீட்டிற்குள் வரும்படி அமையுங்கள். சுற்றிலும் முடிந்த அளவு இடம் விடுங்கள். மின்சார கட்டணம் மற்றும் மருத்துவ செலவை குறையுங்கள்.
 9. நகரத்தில் வீடு அமைக்கும்போது இது என்ன கிராமமா சுற்றிலும் இடம் விட அதெல்லாம் முடியாது ஒவ்வொரு சதுரடியும் எவ்வளவு முக்கியம் தெரியுமா என்கின்றனர்.  நீங்க சுகாதாரமா இருக்கணும்னா சுற்றிலும் இடம் விடுங்க காத்தோட்டமா இருந்தா நோய் வராது. நகரத்துலதாங்க கட்டாயம் இடம் விடணும்.  கிராமத்துல ஏற்கனவே அவங்க சுத்தமான காற்றைத்தான் சுவாசிச்சுகிட்டு இருக்காங்க, அவங்களே இடம் விட்டு கட்டும்போது நாம இடம் விடாம கட்டுறது சரியா ?
 10. அதிக பரண்களை அமைக்காதீர்கள் பரணில் அடையும் பொருட்கள் உள்ளேயே முடங்கி கிடக்கும்.  தூசி அடைந்து சுகாதார கேட்டையே விளைவிக்கும் முடிந்த அளவு தேவையில்லாத பொருட்களை கழித்து. வீட்டை சுத்தமாக வையுங்கள்
 11. வீட்டில் அதிகநேரம் இருப்பது பெண்களே எனவே அவர்களின் தேவை அறிந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். (கிட்சன், பாத்ரூம் பெருசாக அமைப்பது, கிச்சனில் இருந்து டிவி பார்க்கும் வசதி போன்றவை 🙂 ) வீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா ? எப்படி வாங்குவது ?

 

கட்டுமானத்தில் செலவு குறைக்கும் வழிகள் சில : (இங்கு மேலோட்டமா சொல்கிறேன் ஒவ்வொரு நிலையாக பார்க்கும் பொது இன்னும் தெளிவாக சொல்கிறேன்)

 1. கதவு ஜன்னல் எல்லாம் மரத்தில்தான் போட வேண்டும் என்பதில்லை இப்போது கான்கிரீட் நிலைகள், ஜன்னல்கள் கூட வந்து விட்டன இவைகள் மர நிலைகளை விட உறுதியானது, செலவு கம்மியானது கரையான் அரிக்காது. UPVC ஜன்னல்கள் கூட உபயோகிக்கலாம் பட்ஜெட்க்குள் வரும்.
 2. செங்கல் வாங்கும்போது அருகில் இருக்கும் செக்கல்லிலேயே சிறந்த கல்லாக பார்த்து வாங்கிக்கொள்ளலாம் சேம்பர் செங்கல்தான் உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. செலவு  வெகுவாக குறையும்.
 3. அதேபோல் இப்போது அனைத்து  கட்டிடமும் பில்லர் போட்டு தான் கட்டுகிறோம் பின் ஏன் சேம்பர் செங்கல் அது இது என செலவை கூட்ட வேண்டும் பிரேம் ஸ்ட்ரெக்ச்சர் ஆக கட்ட முற்பட்டால் ஹலோ பிளாக்கிலேயே தாராளமாக கட்டலாம்.
 4.  அனைத்து வேலைகளுக்கும் எம்சாண்ட் தாராளமாக பயன்படுத்தலாம் ஆற்று மணலுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டாம்.
 5. பொருட்களை தேவைக்கு ஏற்ப வாங்கி சேதங்களையும், பண முடக்கத்தையும் தவிருங்கள்.

கட்டிட வரைபடம் முடிவு  செய்தல் :

வரைபடம் தயார் ஆன பின் அதை அனைத்து விதங்களிலும் ஆராயுங்கள் அந்த வரைபடத்தின்படி உங்கள் வீட்டை கற்பனை செய்து அதில் உலாவாருங்கள் அதில் எங்காவது வசதி குறைபாடு உள்ளதா என பாருங்கள்.

வரைபடத்தை அளவுக்கு (Scale 1:100) வரைந்து பாருங்கள் அப்போதுதான் சரியான நீல அகலம் தெரியும்.

முதல்மாடி சேர்த்து எடுப்பதாக இருந்தால் அதையும் முன்பே முடிவு செய்து கொள்ளுங்கள் அப்போதுதான் அதற்கேற்றார்போல் சுவர்கள் அல்லது பீம்கள் அமைக்க முடியும்.

வீட்டில் மூத்தோரிடம் கலந்து ஆலோசியுங்கள் அனுபவம் வாய்ந்த அவர்களின் சிறு சிறு ஆலோசனையும் நமக்கு பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும்.

வீடு கட்டுவதற்கு கட்டிட பிளான் அப்ரூவல் முக்கியமா ? எப்படி வாங்குவது ?

வாஸ்து சாஸ்திர விதிகளை மறக்காதீர்கள்

இதையும் படிங்க :வீட்டு கட்டுமானத்தில் வாஸ்து பலன்கள் உண்மையா? பொய்யா?

வடகிழக்கு மூலையில் அதாவது ஈசானிய மூலையில் வீட்டின் தலைவாசல், படிப்பறை, படுக்கை அறை போன்றவைகள் அமைக்கலாம்,

தென் கிழக்கு அக்கினி மூலையில் சமையல் அறை, சாப்பாட்டு அறை, கழிவறை போன்றவைகள் அமைக்கலாம்.

தென்மேற்கு கன்னி மூலையில் பூஜை அறை, மற்றும் பணம் வைப்பு அறை, படுக்கை அறை, மற்றும் தலைவாசல் அமைக்கலாம்.

வடமேற்கு வாயு மூலையில் கழிவறை, பாத்திரம் கழுவும் அறைகள், சமையலறை போன்றவைகள் அமைக்கலாம்.

படிகள் வடமேற்கு மூலையில் ஆரம்பித்து வட கிழக்கிலோ அல்லது தென் மேற்கிலோ முடியலாம், அதேபோல் தென் கிழக்கில் ஆரம்பித்து வட கிழக்கிலோ அல்லது தென் மேற்கிலோ முடியலாம்.

ஈசானிய மூலையில் அதிக பாரம் ஏற்ற கூடாது, அதே போல் வீட்டின் தாழ்வான பகுதி இதுவாகத்தான் இருக்க வேண்டும்.  எனவே இதன் வழியாகத்தான் தண்ணீர் கடத்த வேண்டும்.

வாயு மூலை ஈசானிய பகுதியைவிட உயரமாக இருக்கலாம், அக்கினி பகுதியைவிட தாழ்வாகவோ  அல்லது சமமாகவோ இருக்கலாம், கட்டாயம் கன்னி பகுதியை விட தாழ்வாக இருக்க வேண்டும்.

அக்கினி  மூலை ஈசானிய பகுதியைவிட உயரமாக இருக்கலாம், வாயு  பகுதியைவிட உயரமாகவோ  அல்லது சமமாகவோ இருக்கலாம், கட்டாயம் கன்னி பகுதியை விட தாழ்வாக இருக்க வேண்டும்.

கன்னி பாகம் நிச்சயம் வீட்டின் உயர்ந்த பகுதியாக இருக்க வேண்டும். இதுதான் வீட்டின் அதிக பாரங்களை தாங்கும் பகுதியாகவும் இருக்க வேண்டும்.

மேல்சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு உங்கள் வீட்டு வரைபடத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.  பின் எக்காரணத்தை கொண்டும் மாற்றங்கள் செய்ய கூடாது அது செலவை அதிகரிக்கவே செய்யும்.

அடுத்த பதிவில் கட்டுமான காண்ட்ராக்ட் எப்படி விடுவது? அவற்றில் என்ன என்ன பார்க்க வேண்டும் ? சற்று விரிவாக பார்ப்போம் .

சொந்த வீடு கட்டுரை பதிவுகள்  :

அத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

அத்தியாயம் 2 : காலி மனையிடம் வாங்கியபின் செய்ய வேண்டிய அத்தியாவசிய வேலைகள்

அத்தியாயம் 3: வாஸ்து பூஜை எப்போது ? எப்படி ? செய்வது.

அத்தியாயம் 4: வரைபடம் தயார் செய்தல் மற்றும் திட்டமிடல்

Comments
Loading...