My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

காணி நிலம் வேண்டும் – பாரதியின் கனவு இல்லம்

இல்லம் பற்றிய கனவு அனைவருக்கும் உண்டு

0 151

Get real time updates directly on you device, subscribe now.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிள நீரும், பத்துப் பனிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும்…

பாரதிக்கு மட்டுமல்ல மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இது ஒரு தணியாத ஆசை.  அது ஓலை  குடிசையாக இருந்தாலும் மாடமாளிகையானாலும் சரி சொந்தகமாக வேண்டும் என்பதே அது.

 

மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து சம்பாதித்த பணத்தில் சிறிய இடம் வாங்கி அதில் நம் கனவுகளை எல்லாம் திணித்து ஒரு வீட்டை கட்ட நினைப்பது நல்ல விஷயம் தானே.

 

ஆணி அடிக்காதே,  சும்மா சும்மா மோட்டார் போடாதே, நைட் பூராவும் லைட்ட போட்டு  எரிக்காதே இப்படி எத்தனை நாட்களுக்கு  நாம் வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளரின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு இருப்பது ?

 

ஆனா அப்படி கனவு இல்லம் அமைவது சுலபமா?  இடம் வாங்குவதில் இருந்து கிரஹப்பிரவேசம் செய்து நாம் குடி போகும் வரை ஏகப்பட்ட விஷயங்கள் அதில் ஆயிரத்தியெட்டு பிரச்சனைகள் உள்ளன.  அவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பது நல்ல விஷயங்களை எப்படி தேர்ந்து எடுப்பது போன்ற விபரங்கள் அனைத்தையும் உங்களுக்கு அலசி ஆராய்ந்து வழங்க உள்ளது இந்த மைபிரிக்ஸ் வெப்சைட். தொடர்ந்து பாருங்கள். பயன் பெறுங்கள் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் அனைத்திற்கும் விளக்கமும் விடையும் கிடைக்கும்

Comments
Loading...