My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

அத்தியாயம் 3: வாஸ்து பூஜை எப்போது ? எப்படி ? செய்வது.

How to do vasthu pooja and when ?

0 379

Get real time updates directly on you device, subscribe now.

புதிதாக இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய  விஷயங்கள் மற்றும் வாங்கியபின் செய்ய வேண்டிய அத்தியாவசிய வேலைகள் பற்றி நாம்  சென்ற அத்தியாயங்களில்  பார்த்தோம்

அதேபோல் வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்கள் குறித்தும், நம் வீட்டைக் காக்கும் தெய்வமான அவரை பூஜித்துவிட்டு வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும் என்றும் சென்ற ஏற்கனவே நமது இணைய தளத்தில்  “வாஸ்து நம் தோஸ்து ஆகணும்னா”  என்ற தலைப்பு கட்டுரையில் பார்த்தோம்.

சுருக்கமாக சில வரிகள் அவற்றில் இருந்து :

”வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர்.

பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

2019 வாஸ்து பூஜை நாட்கள் பின் வருமாறு :

 

2019 வருட வாஸ்து நாட்கள்

ஜனவரி 26 தை 12 சனி காலை 10.41 11.17
மார்ச் 6 மாசி 22 புதன் காலை 10.32 11.08
ஏப்ரல் 23 சித்திரை 10 செவ்வாய் காலை 08.54 09.30
ஜூன் 4 வைகாசி 21 செவ்வாய் காலை 09.58 10.34
ஜூலை 27 ஆடி 11 சனி காலை 07.44 08.20
ஆகஸ்ட் 23 ஆவணி 6 வெள்ளி காலை 07.23 07.59
அக்டோபர் 28 ஐப்பசி 11 திங்கள் காலை 07.44 08.20
நவம்பர் 24 கார்த்திகை 8 ஞாயிறு காலை 11.29 12.05

 

மேற்கூறிய நேரமே வாஸ்து விழிப்பு நேரமாகும்.

இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான்விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் (90 நிமிடங்கள்) வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.

இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும்.

இந்தத் தேதிகளில், ஒவ்வொரு வருடமும்  ஆங்கில தேதிகள், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும்,  தமிழ்  தேதிகள் மற்றும் நேரம் மாறுவதில்லை மாறுவதில்லை. அதேபோல் இந்த நாட்களுக்கு வாரம்,திதி, நட்சத்திர தோஷம் கிடையாது.

வாஸ்து நேரங்கள் காலை சூரிய உதயம் 6.00 மணி என கணக்கிட்டு கூறப்பட்டுள்ளது.  உங்கள் ஊரில் வாஸ்து நாட்களில் சூரிய உதயம் கணிக்கிட்டு நேரத்தை மாற்றி கொள்ளலாம்.

 

வாஸ்து பூஜை செய்வது எப்படி ?

மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளைப் பெறுவதற்கு, அவரை பூஜித்து மகிழ்விப்பது எப்படி என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.

 

பூஜைக்குத் தேவையானவை:

பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், விபூதி, ஊதுவத்தி,  நவரத்தினங்கள் (உரிய கடைகளில் கிடைக்கும்), பஞ்ச லோகங்கள், நவதானியங்கள்.

எப்படி பூஜிப்பது?

முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும் பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில் (அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும். அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.

பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதாரத் துதித்தபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர் எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.

அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும் கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து, நவகிரகங்களின் திருவருளைப் பெறும்பொருட்டு,  சூரியதேவனே போற்றி, சந்திரனே போற்றி என்று துவங்கி நவகிரகங்களையும் போற்றிக்கூறி வழிபட்டு நவதானிங்களையும், நவ ரத்தினங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து வழிபடவேண்டும். நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும். இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம். இந்த முறை எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய முறையாகும்.

சொந்த வீடு கட்டுரை பதிவுகள்  :

அத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

அத்தியாயம் 2 : காலி மனையிடம் வாங்கியபின் செய்ய வேண்டிய அத்தியாவசிய வேலைகள்

அத்தியாயம் 3: வாஸ்து பூஜை எப்போது ? எப்படி ? செய்வது.

 

 

Comments
Loading...