My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

வீட்டின் மின் தேவையை கணக்கிடுவது எப்படி ?

How to calculate current usage in Home

0 401

Get real time updates directly on you device, subscribe now.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கரண்ட் அளவை எவ்வாறு கணக்கிடுவது.  அதை நாமே மிக சுலபமாக கண்டு பிடிக்கலாம்

நாம் அனைவருமே வீட்டு கரண்டு பிள்ளை இரண்டுமாதத்திற்கு ஒருமுறை கட்டுகிறோம்.ஆனால் நம்மில் பலபேருக்கு வீட்டில் நாம் எவ்வளவு கரண்டு பயன்படுத்துகின்றோம் என்று தெரியாது.

இரண்டு யூனிட் மூன்று  யூனிட் என்று வாய்வழியாக பேசிக்கொள்வோம் ஆனால் யூட் என்றால் என்னவென்று  தெரியாது.

கவனமாக பாருங்கள்:
  • முதலில் வீட்டில் நாம்  பயன்படுத்தும் light மற்றும் fan -ன் வாட்ஸ் எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
  • light -ன்  வாட்ஸ் பார்ப்பதற்கு அந்த light -ன் முகப்பிலே 60watts அல்லது 40watts ஏற்று இருக்கும் .
  • நான்கு 60watts பல்பு மற்று நான்கு 80watts பேன்கள் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தினால் எவ்வளவு கரண்டு வரும் என்பதைப்பார்ப்போம்
நான்கு பல்பு 60watts
நான்கு பேன் 80watts
  • ஒரு பல்பு 60watts என்றால் நான்கு பல்பு =240watts ஆகும்.
  • ஒரு பேன் 80watts  என்றால் நான்கு பேன் =320watts ஆகும்.
  • 240+320=560 வாட்ஸ் .
  • 560watts * 4 மணிநேரம் = 2240watts ஆகும் .
  • இந்த வாட்சை -1000 த்தால் வகுக்கவேண்டும் . ஏனென்றால் ஒரு யூனிட் என்பது 1000waats ஆகும்.
  • அப்படிவகுத்தால் நமக்கு 2 .24 யூனிட் கிடைக்கும் அப்படி என்றால் நாம் ஒருநாளைக்கு 2 .24 யூனிட் பயன்படுத்துகிறோம் ஏற்று அர்த்தம்.
  • ஒருமாதத்திற்கு 30*2.24=67.2 யூனிட் ஆகும்.
  • 67 .2 யூனிட் ஒருமாதத்திற்கு பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
  •  உதாரணத்திற்கு ஒரு யூனிட் 1.80 பைசா என்றால் 67.2 யூனிட்டுக்கு 120.96 ரூபாய் ஆகும்.[67.2 * 1.80=120.96 RS]
  • மின் கட்டண விபரங்கள் அறிய  https://www.tangedco.gov.in/ttariff.html
இதுவே  உங்கள் வீட்டில் நீங்கள் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவு. இதை வைத்து நீங்கள் கரண்ட் பில் கணக்கிட்டு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.  எனது அடுத்த பதிவில் ஒவ்வொரு மின் உபகரணங்களும் எவ்வளவு கரண்ட் எடுக்கும் என்பதை பற்றி விபரம் அளிக்கிறேன்.
Comments
Loading...