My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

வீட்டு வயரிங் சில விளக்கங்கள் – நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

House wiring some explanations and tips

0 506

Get real time updates directly on you device, subscribe now.

ஒயரிங் செய்வதற்கு 1/8″, 2/18″, 3/18″ மற்றும் 1/20″, 3/20″ என்று பல வகையான ஒயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது,
1/18″ இதில் 18 என்ற எண் ஆனது ஒயரின் உள்ளாக இருக்கக்கூடிய மின்சாரம் செல்லும் கம்பியின் பருமன் ஆகும். மேலும் கேஜ் என்பார்கள் (18 கேஜ் என்று சொல்வார்கள் ).
1 என்ற எண் ஆனது 18 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் ஒரு கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்பதை குறிக்கிறது.
இதே போன்று தான்  2/18″, 3/18″, 1/20″, 3/20″ எல்லாமே ஆகும்.
3/20″ என்பது மேலே சொன்னதைப் போன்றே  20 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் மூன்று கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்று அர்த்தம் ஆகும்.
நாம் மின்சாரம் கடத்தும் கம்பியை கையால் தொட்டால் உயிருக்கு ஆபத்து ஏர்படும்   என்வே தான் ஒயர் என்ற இன்சுலேசன் அமைப்பிற்கு உள்ளாக கம்பி இருப்பது போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சரி அது என்ன இன்சுலேசன் என்ற கேள்வி எழுகிறதா இதோ பதில்:
நாம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இன்சுலேட்டர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மின் கடத்தா பொருள்கள் அனைத்தும் இன்சுலேட்டர்கள் என்று சொல்லலாம்.
உதாரணமாக:
கண்ணாடி, பிளாஸ்டிக்குகள், பேப்பர், பீங்கான், நன்றாக காய்ந்த மரக்கட்டை, ரப்பர் வகை மற்றும் காட்டன்கள். இவை அனைத்திலும் மின்சாரம் பாயாது. இதையே நாம் இன்சுலேசன் என்று சொல்கிறோம்.
சரி இனி விட்டதிலிருந்து தொடருவொம்,
 
இப்படி 1, 2, 3….. என்று கம்பிகள் இல்லாமல் அதற்கு பதிலாக அதிகமான பல சிறு சிறு கம்பிகள் உள்ள ஒயர்களும் இருக்கிறது. இதனை மல்டிபிளக்ஸ் ஒயர் என்று கூறவேண்டும்.
அதிக பருமன் உள்ள ஒயர்களை வாங்கும் போது sq.mm (ஸ்கொயர் எம் எம்) என்று சொல்லித் தான் வாங்க வேண்டும்.
உதாரணமாக:
16 sq.mm, 18 sq.mm, 20 sq.mm கொடுங்கள் சார் என்று கேட்டு வாங்க வேண்டும்.
மின்சாரத்தின் அளவைப் பொருத்தும், பயன்படுத்தும் மின் சாதனத்தின் மின்சார அளவைப் பொருத்து மட்டும் தான் நாம் ஒயரை வாங்க வேண்டும்.
கவணிக்க வேண்டியது:
கம்பியின் கேஜ் அதிகமாக இருந்தால் கம்பியின் பருமன்  சிறியதாக இருக்கிறது என்று அர்த்தம். கம்பியின் கேஜ் குறைவாக இருந்தால் கம்பியின் பருமன்  பெரியதாக இருக்கிறது என்று அர்த்தம்.
கம்பியின் பருமன் பெரியதாக இருந்தால் அதிக அளவு மின்சாரம் குறைந்த வேகத்தில் பாயும். கம்பியின் பருமன் சிறியதாக இருந்தால் குறைந்த அளவு மின்சாரம் அதிக வேகத்தில் பாயும்.
(தோட்டங்களில் பயன்படுத்தும் மோட்டார் பைப்புகளை நினைத்துப் பார்த்தல் தெளிவாகப் புரியும். பைப்பின் அளவு சிறியதாக இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் வேகமாக வரும். பைப்பின் அளவு பெரியதாக இருந்தால் தண்ணீர் அதிக அளவு தண்ணீர் குறைந்த வேகத்தில் வரும்.)
கம்பியின் பருமன் அதிகமாக இருந்தால் (கேஜ் எண் குறைவு) மின்தடை (resistance) குறைவாக இருக்கும் அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்லும்.
கம்பியின் பாருமன் குறைவாக இருந்தால் (கேஜ் எண் அதிகம்) மின்தடை (resistance) கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி என்றால் கரண்ட் ஆனது குறைவாகச் செல்லும்.
எனர்ஜி மீட்டர்:
நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவை இது காட்டும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் மின் சாதனங்களின் மொத்த மின்சார அளவையும் இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இது அளவுகளை kwh என்ற முறையில் காட்டும். 1000 wh என்பது 1 kwh எனப்படும் இந்த 1kwh என்பது 1 unit ஆகும். 1 மணி நேரத்தில் 1000 wh மின்சாரம் பயன்படுத்தி இருந்தோமேயானால் அது 1 unit எனப்படும்.
மின்சார வாரியத்தில் இருந்து வருபவர்கள் இந்த மீட்டரில் காட்டும் யூனிடை வைத்துதான் எவ்வளவு பணம் நாம் செழுத்த வேண்டும் என்று அட்டையில் எழுதிவிட்டுச் செல்வாகள்.
மெயின் சுவிட்ச்:
இந்த சுவிட்சை தலைவர் என்று சொல்லளாம் தொண்டர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்யும் பொறுப்பு மற்றும் அவர்களை நீக்கும் அதிகாரம் அனைத்தும் தலைவருக்கு  உரியது.
மெயின் சுவிட்ச் அமைப்பும் அப்படித்தான் வீட்டிற்கு செல்லக்கூடிய மின்சாரம் மெயின் சுவிட்சை தாண்டித்தான் செல்ல வேண்டும்.
அப்படி தாண்டி சென்ற பிறகு மின் சாதனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நாம் இந்த மெயின் சுவிட்சை ஆப் செய்து விடலாம். அப்படி ஆப் செய்து விட்டால் வீட்டிற்கு செல்லும் மொத்த மின்சாரமும் நின்றுவிடும்.
பழுது ஏற்பட்ட மின் சாதனத்தையோ, ஒயரையோ சரிசெய்து விட்டு மீண்டும் மெயின் சுவிட்சை ஆன் செய்து கொள்ளலாம்.
2வே, 3வே என்று பல வகைகளில் change over switch கிடைக்கிறது. இதன் ஆம்பியர் அளவு 15A, 30A, 60A, என பல ஆம்பியர் அளவுகளில் கிடைக்கின்றன.
என்னுடைய வீட்டில் நான் பயன்படுத்துவது 2வே change over switch ஆகும். இதில் 1வே(வழி) மின்சார வாரியத்தில் இருந்தும் வரும் மின்சாரத்தையும் மற்றொரு வே அந்த மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையிலும் இருக்கும்.
இதன் ஆம்பியர் மற்றும் மின்னழுத்த அளவு 32A ~ 415V ஆகும். தயாரித்த நிறுவனத்தின் பெயர் Roopa change over switch ஆகும்.
பியூஸ் கேரியர்:
இது நமது பயன்பாட்டிற்கு ஏற்ப 15A, 30A, 60A, என பல ஆம்பியர் அளவுகளில் கிடைக்கின்றன.
இதன் முக்கிய வேலை என்னவென்றால் நமது வீட்டிற்கு ஒரு நிலையான மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது (230V). மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக சற்று அதிக அளவில் மின்சாரம் வரும் போது (240V – 250V). இந்த பியூஸ் ஆனது எரிந்து விடுகிறது. வீட்டிற்குல் இருக்கும் மின் சாதனங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மிகவும் பாவம் இந்த பியூஸ் தன்னை வருத்திக் கொன்டு மற்றவர்களை காப்பாற்றுகிறது.
மீண்டும் நாம் எரிந்துபோன பியூஸ் கம்பியை எடுத்துவிட்டு மெல்லிய காப்பர் கம்பியை இனைத்து சரிசெய்து விடலாம். எனவே மீண்டும் சிங்கம் கலத்திற்கு வந்துவிடும்.

 

எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் (ELCB):
இதுவும் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஒயர்கள்  மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும் போது பேஸ் லைன், நியூட்டர்ல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ஷாட் ஆகும் சமயத்தில் இந்த ELCB ஆனது ஆப் ஆகி அதாவது ட்ரிப் ஆகி மின்சாரத்தை நிருத்திவிடும்.
பிறகு பழுதை சரிசெய்து நாம் இந்த ELCB-யை ஆன் செய்து கொள்ளலாம். இதில் 3பேஸ், சிங்கில் பேஸ் இணைப்பு கொடுக்கு வகையில் இதன் துவாரங்கள் இருக்கும்.
3பேஸ் என்றால் நான்கு ஒயர்கள் இணைக்க நான்கு துவாரங்கள் இருக்கும். சிங்கில் பேஸ் என்றால் இண்டு ஒயர்கள் இணைக்க இரண்டு துவாரங்கள் இருக்கும். இதன் கீழ் துவாரம் இன்புட், மேல் துவாரம் அவுட்புட் ஆகும்.
வீடுகளில் எர்த் அல்லது நியூட்ரல் சிறிது லீக் ஆனாலும் ELCB-ஆனது ட்ரிப் ஆகிவிடும். இதன் விலை அதிகம் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது ஆகும்.
மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் (MCB) மற்றும் ரெஸிடுவல் கரென்ட் சர்க்யூட் பிரேக்கர் (RCCB):
நாம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் போது படுக்கை அறை, சமையல் அறை, நூலக அறை என்று நாம் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக ஒயர்களைப் பிரித்து எடுத்துச் செல்வோம். இதை சர்க்யூட் என்று சொல்வோம்.

அதாவது படுக்கை அறை சர்க்யூட், நூல அறை சர்க்யூட், சமையல் அறை சர்க்யூட் என்று அர்த்தம்.
இந்த ஒவ்வொரு சர்க்யூட்டுக்கும் ஒரு பியூஸ் வைப்பது வழக்கம் ஆனால் மின்சார நிலையங்களில் பழுது ஏற்பட்டு பியூஸ் எரியும் போது ஒவ்வொரு முறையும் நாம் மாற்ற வேண்டும். எனவே இந்த இடங்களில் எல்லாம் நாம் MCB-யை பயன்படுத்துகிறோம்.

நாம் வீடுகளில் எத்தனை அறைகள் வைத்து இருந்தாலும் அத்தனை அறைகளுக்கும் MCB வைப்பது நல்லது. எந்த அறையில் உள்ள சர்க்யூட் பழுது ஏற்படுகிறதோ அந்த சர்க்யூடின்  MCB-ஆனது ட்ரிப்பாகிவிடும். பழுது ஏற்பட்டு விட்டது என்று மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
MCB என்பது இன்றைக்கு மிக மிக இன்றியமையாதது ஆகும்.

குறிப்பு:
RCCB-யை MCB-க்கு முன்பாக இனைக்க வேண்டும்.

 

 

Comments
Loading...