My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி !

Guide to new house construction Owners

0 688

Get real time updates directly on you device, subscribe now.

புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீடு இப்படி தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என்ற கவலை ஒரு புறம் இருக்க செய்யும். உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும்.  அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் விரயமாகும்.
அத்துடன் திட்டமிட்டபடி ஒவ்வொரு நிலையிலும் பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும். ஆகவே கட்டுமான பணியை தொடங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்

கட்டிட வரைபடம் :

வீடு எத்தகைய வடிவமைப்புடன் அமைய வேண்டும் என்பதை கட்டிட வரைபடம் தான் நிர்ணயிக்கும். எனவே வரைபட தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் எத்தனை அறைகள் அமைக்கப் போகிறோம்.
ஒவ்வொரு அறையும் எவ்வளவு நீளம், அகலம் இருக்க வேண்டும் என்பதை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் அறைகள் எந்தெந்த திசையில் அமைய வேண்டும்? அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்? என்பது பற்றியும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.  தேவைப்பட்டால் பிற வீடுகளை பார்த்தும், அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறலாம். ஆனால் கட்டிட வரைபடம் தயாரித்து இறுதி செய்தபிறகு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

கட்டுமானப்பணியின் போது தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அவை கட்டிட வரைபட வரைமுறைக்கு உட்பட்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  கட்டுமானப்பணிகள் ஆரம்பித்த பின்னர் பெரிய அளவில் மாற்றம் செய்ய நினைத்தால் மீண்டும் கட்டிட வரைபடம் தயாரிக்க வேண்டியிருக்கும். அதனால் தேவையில்லாத கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.  கட்டுமான பணி தொடங்கும் போதே வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு தொகை செலவு ஆகும்? நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும்? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவசியம்.
பணி தொடங்கியபிறகு கடன் வாங்கி கொள்ளலாம் என்று கற்பனை கோட்டை கட்டுவது பயன் தராது. ஏனெனில் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் போனால் கட்டுமானப்பணி பாதியில் நிற்கக்கூடும். ஆதலால் வீட்டை கட்டிமுடிப்பதற்கு ஆகும் தொகையை முதலிலேயே தயார் செய்து விட்டு கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும்? பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்!

ஒப்பந்தம் செய்யும் விதம் :

கட்டுமான பணியை ஒப்பந்ததாரரிடம் கொடுக்கும் பட்சத்தில் எவ்வளவு காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பது பற்றி இருவரும் கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும்.  கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் பணிக்கு இலக்கு நிர்ணயித்து அந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் எந்த அளவு வேலை முடிந்துள்ளது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  திட்டமிட்டபடி பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.  பணியில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதுபற்றி ஒப்பந்ததாரருடன் கலந்து பேசி அதன் விவரங்களை அவசியம் இருதரப்பும் எழுதி வைக்க வேண்டும்.
அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை குறித்து வைக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு கட்ட நிலையிலும் ஆகும் செலவையும் எழுதி வைக்க வேண்டும்.

ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டியவை :

கட்டிடம் கட்ட பயன்படும் தண்ணீர், மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு கட்டிட உரிமையாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.  சிமெண்ட், செங்கல், கம்பியில் தொடங்கி டைல்ஸ், பெயிண்ட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வரை அனைத்து பொருள்களும் எந்த கம்பெனியின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதையும், அப்பொருட்களின் அடிப்படை விலை பற்றிய விவரங்களும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்.
கட்டுமான பொருட்களின் விலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ அதை இருவரும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.  கட்டிடம் தவிர பிற வேலைகளான காம்பவுண்ட் சுவர், படிக்கட்டு, போர்டிகோ, நுழைவு வாயில், நீர் தேக்கத்தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றின் அளவு மற்றும் அதற்கு ஆகும் கட்டுமான செலவு விவரங்களை முதலிலேயே முடிவு செய்ய வேண்டும். கப்போர்ட் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதும் முதலிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.

வீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

கதவு, ஜன்னல், கிரில் வகைக்கு தனியாக வரைபடம் தயாரித்து அதில் உரிமையாளர், ஒப்பந்ததாரர் இருவரும் கையெழுத்திட வேண்டும்.
ஒவ்வொரு பகுதி வேலை முடியும்போதும் எத்தனை சதவீதம் பணம் கொடுக்கவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும்.
இயற்கை பேரிடர் மற்றும் இன்னபிற காரணங்களால் வரும் இழப்புகள், அதனால் வரும் செலவுகளுக்கு யார்? யார் எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம். எந்த ஒரு வேலையையும் இது தனி, அது தனி என பிரிக்காமல், வேலைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும் ஒரு சிறந்த பொறியாளரிடம் கலந்து ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டு பின்னர் அவ்வப்போது அவரிடம் ஆலோசித்து கட்டுமான பணியை மேற்கொள்வது நல்லது.  பொதுவாக பேஸ்மெண்ட் உயரம், நுழைவு வாயில், டைல்ஸ், கப்போர்ட், போர்டிகோ, மொட்டை மாடி போன்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  மேலும் கட்டிட உரிமையாளர் தனது தேவைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். பணம் முழுவதையும் மொத்தமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் பணத்தை பகுதி பகுதியாக வழங்கலாம்,அது மூன்று அல்லது நான்கு தவணையாக இருக்கலாம்.

வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை !

மேலும் சில தகவல்கள் :

வீடு கட்டுவதில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. இன்று வீடு கட்டுபவர்களை விட அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குபவர்களே அதிகம்.  இதற்குக் காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வீட்டு மனைகள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலையேற்றம். அதுமட்டுமல்ல இப்போது கட்டுமானத்திற்கு மிக அவசியமான மணல் போன்றவற்றிற்கு நிலவும் தட்டுப்பாடும் ஒரு காரணம். இன்றைக்குள்ள பரபரப்பான வாழ்க்கையில் இவை ஒவ்வொன்றிற்கும் அலைந்து திரிந்து வீட்டைக் கட்டப் பெரும்பாலானவர்களுக்குப் பொறுமை இல்லை.

தனக்கென சொந்த வீடு வாங்கியவுடன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்

சொந்த வீட்டின் அவசியம் :

இன்றைக்கு உள்ள இந்த நிலையிலும் தங்களுக்கெனச் சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு சிறிய தோட்டம் அமைத்துச் சந்தோஷமாக வாழ ஆசைப்படுவர்கள் உண்டு. நகருக்குள் மனை வாங்க இயலாத காரணத்தால் நகர்ப் பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப் பகுதிகளில் சமாளிக்கும் வகையில் வங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினால் குடிபுகுமுன் மொத்தப் பணத்தையும் செலுத்திவிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் கட்டப்படும் தனி வீடுகளில் அது இல்லை.
சிலவற்றை முடிக்க முடியாமல் போனால் கூட நாளடைவில் முடித்துக்கொள்ளலாம் என்கிற வசதி உள்ளது. இப்போதெல்லாம் வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.  இன்றைய தலைமுறை இளைஞர்கள் குறிப்பாக நடுத்தர வருவாயுள்ளவர்கள் சொந்த வீட்டின் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.

தனக்கென சொந்த வீடு வாங்கியவுடன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்

வரைபடத்தில் உள்ள அளவுகளில் ஓரடி கூட்டினால் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டில் பெரிய அளாவு துண்டு விழும். இதை இப்போதே நினைவில் கொள்ளலாம்.
காற்று வர வழிசெய்வோம் வீட்டினுள் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டுமானால் வீட்டினுள் காற்று நுழைந்து வெளியேறும் வகையில் கதவுகளையும், ஜன்னல்களையும் அமைக்க வேண்டும். கதவுக்கு நேராக கதவு, ஜன்னலுக்கு நேராக ஜன்னல் அமைத்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். எல்லா அறைகளிலும் ஜன்னல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டின் ஆரோக்கியத்திற்கு வெளிச்சமும் காற்றும் அவசியம்

பரணைத் தவிர்ப்போம் :

படுக்கையறை அறையின் எல்லாப் பக்கங்களில் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் வரவேற்பறையிலும் தேவையில்லாமல் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் பரண் அமைக்கும்போது அதில் தூசிகள் அடையும். ஒட்டடைகள் உருவாகும். அதுபோல பல்லி, கரப்பான், ஆகியவற்றின் வசிப்பிடமாக இம்மாதிரியான பரண் ஆகிவிடும்

வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்

தளத்தை உயர்த்துவோம் :

பொறியாளரின் முறையான ஆலோசனையைப் பெற்று வீட்டுத் தளத்தின் உயரத்தைப் பத்தடிக்கு மேல் சற்று உயர்த்தினால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கோடைக் காலத்தில் மொட்டை மாடியிலிருந்து வீட்டினுள் இறங்கும் வெயிலும் தக்கம் சற்றுக் குறைவாக இருக்கும்.

தளங்களை மேம்படுத்துவோம் :

கூடுமான வரையில் வழுக்கும் தளங்களை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியான வழுக்கும் டைல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் புழங்குவதற்கு ஏற்றதாக இருக்காது. குளியலை, கழிவறை போன்ற அறைகளில் சொரசொரப்பான டைல்களையே அமைக்க வேண்டும்.

மின் இணைப்பையும் திட்டமிடலாம் : 

சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்ற அறைகளில் நமது உபயோகத்திற்குத் தகுந்தவாறு விளக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மின்சிக்கனம் அவசியம் என்பதால் எல்லா அறைகளுக்கும் அதிக மின் சக்தியை எடுக்கும் விளக்குகள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் எங்கெங்கு மின் இணைப்பு தேவைப்படும் என்பதை முதலிலேயே தீர்மானித்து கட்டிடத்திற்குள்ளே குழாய்களைப் பதித்துவிடுவது நல்லது.
கட்டிடம் கட்டி முடித்த பிறகு குழாய் இணைப்பிற்காகத் துளையிடுவதைத் தவிர்க்கலாம்.

வீட்டு கட்டுமானத்தில் வாஸ்து பலன்கள் உண்மையா? பொய்யா?

மழை நீரை சேமிப்போம் :

வீட்டின் கூரையில் விழும் மழை நீரை விரயம் செய்யாத வகையில் எல்லா மழை நீரையும் நேரடியாக நீரைச் சேமிக்கலாம். இல்லையெனில் பூமிக்குள் இறக்கலாம்.  அதற்கான முறையான மழை நீர் சேகரிப்பு நடைமுறைகளின் படி அமைக்கலாம். மேலும் வாஸ்து, ஐஸ்வர்யம் என்ற பெயரில் அதிக அளவு செடிகொடிகளை வீட்டிற்குள் வளர்க்காதீர்கள் வீட்டிற்குள் பூச்சிகளும் மரவட்டைகளும் கொசுக்களும் தொல்லை தர ஆரம்பித்துவிடும்.

தற்போது நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன அவைகளை தகுந்த பொறியாளரிடம் ஆலோசனை பெற்று நன்முறையில் தங்கள் இல்லங்களை அமைத்து சுகவாழ்வு வாழ்க.

Comments
Loading...