My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

அத்தியாயம் 2 : காலி மனையிடம் வாங்கியபின் செய்ய வேண்டிய அத்தியாவசிய வேலைகள்

Further necessary works after purchasing a vacant land for housing

0 452

Get real time updates directly on you device, subscribe now.

நினைச்ச இடத்துல செடி வைக்கலாம், நினைச்ச கலர் அடிக்கலாம், எந்த இடத்துல வேணும்னாலும் ஆணி அடிக்கலாம் இப்படி சொந்த வீட்டு பெருமையை அடிக்கிக்கிட்டே போகலாம்ங்க…

காலி மனையிடமோ அல்லது பழைய வீடோ வாங்கும்போது என்ன என்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்று போன பதிவுல பார்த்தோம்.

நமக்கு புடிச்ச மாதிரி அருமையான இடம் கிடைச்சாச்சு அப்புறம் என்ன பிளான போட்டு வீடு கட்ட வேண்டியது தான.

இருங்க அதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டாமா.

அப்படி என்ன வேலைகள் இருக்கு ?

நீங்க கட்டிட அனுமதி வாங்க போகும் போதும் சரி அதன்பின் லோன் வாங்க வங்கிகளிடம் அலையும் போதும் நம்மிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி பட்டா வாங்கிட்டீங்களா ?

விளக்கம் : பட்ட வாங்குவது எப்படி ?

நம் பெயரில் பத்திரபதிவு முடிந்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை சொத்து வரியை நம் பெயருக்கு மாற்றுவது.

அடுத்து பட்டாவை நம் பெயருக்கு மாற்றுவது.  அதுதான் பத்திரம் முடிசாசில்லா அப்புறம் என்ன அவசரம் முக்கியம்னு அசால்டா இருந்திராதீங்க.  இப்ப வீடு கட்டல இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கட்டலாம்னு இருக்கேன் அப்ப சொத்து வரி, பட்டா எல்லாத்தையும் மாற்றிக்கிடலாம்னு தள்ளி போடாதீங்க.

அடுத்த முக்கியமான விஷயம் பட்டாவில் உள்ள அளவும் நமது பத்திரத்தில் உள்ள அளவும் சரியா என சரிபார்த்து கொள்ளவும்.  பத்திர அளவுக்கும் பட்டா அளவுக்கும் வித்தியாசம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.  காரணம் பத்திரம் பதியும்போது இடத்தை அளந்து அப்படியே எழுதி கொடுக்கும் வழக்கம் உள்ளது.  நீங்கள் என்ன அளவு எழுதி பதிய கொடுத்தாலும் பதிந்து கொடுத்து விடுவார்கள்.  அதனால் தவறான அளவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் பட்டாவில் சரியான அளவு மட்டுமே வரும் அதில் உள்ள அளவே உங்கள் இடத்தின் சரியான அளவு எனவே வித்தியாசம் சிறிய அளவில் இருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை அதுவே பெரிய அளவில் இருந்தால் பத்திரம் பிழை திருத்தம் கொடுத்து மாற்றி கொள்ளலாம். இதுவும் பத்திரம் முடிந்த்து ஒரு வருட காலதிற்குள் செய்தால்தான் முடியும்.  எனவே காலம் கடத்தாமல் சீக்கிரம் பட்டா வாங்கி விடுங்கள்.

நாம் இடம் வாங்கும்போது விற்பவர் பட்டா வைத்து இருந்தால் அதனை சரிபார்க்கவும் அதில் அளவுகளில் வித்தியாசம் இருந்தால் அதில் உள்ள அளவையே பத்திரதில் எழுத சொல்லுங்கள் அதுதான் சரியான அளவு அந்த அளவுக்கே நீங்கள் பணமும் கொடுக்க வேண்டும்.  அதிகபடியான இடம் அங்கு இருந்தாலும் அது உங்களுக்கு பாத்தியம் ஆகாது.

முதலிலேயே வாங்கி வைக்காமல் தேவையான நேரத்துல உடனே இதெல்லாம் செய்யணும்னா நிறைய செலவு பண்ண வேண்டியிருக்கும் அதுனால முதல்வேலையா இந்த பட்டாவையும், சொத்துவரியையும் உங்கள் பெயருக்கு மாற்றும் வேலையை செய்து முடிச்சிருங்க.

அப்படியே கீழ ஒரு செக்லிஸ்ட் தாரேன் அது எல்லாம் தயாரா வச்சிகங்க :

  1. இடத்தின் பத்திரம்
  2. 1987 வருடம் முதல் தாய் பத்திரம் (Parent Document)
  3. காலியிட வரி ரசீது
  4. பட்டா
  5. பொது சுவர்கள் அல்லது வேறு ஏதும் உடன்படிக்கைகள்

அவ்வளவுதாங்க இது தவிர வில்லங்க சான்று, வழக்கறிஞரின் சட்ட ரீதியான கருத்து, பொறியாளரின் திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் போன்றவைகள் தேவைபடும் அவைகளை நாம் லோனுக்கு போகும்போது தயார் செய்தால் போதும்.

கட்டிட வரைபட அனுமதி எவ்வாறு வாங்குவது என்பது குறித்து ஓரிரு நாட்களுக்குள் பதிவு செய்கிறேன்.  அதற்க்கு தேவையான சில விபரங்கள்  தயார் செய்ய வேண்டியுள்ளது எனவே அடுத்த பதிவு வாஸ்து நாள் மற்றும் வாஸ்து செய்யும் முறைக்கு செல்கிறேன். இடையில் அனுமதி மற்றும் லோன் வாங்குவது குறிந்த பதிவுகளை வெளியிடுகிறேன்.  பொறுத்து கொள்ளுங்கள் நண்பர்களே.

அடுத்த கட்டம் வாஸ்து செய்ய நாள் பார்க்க வேண்டியதுதான்…

தொடரும்…

முந்தைய பதிவுகள் :

அத்தியாயம் 1: நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

 

Comments
Loading...