My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

சிவில் இன்ஜினீரிங்ல இவ்வளவு இருக்கா ?

Civil Engineering Students must to know

0 236

Get real time updates directly on you device, subscribe now.

நாலு பேரிடம் பெருமையாக சொல்ல வேண்டுமே, நாலு பேர் நம்மை மதிக்க வேண்டுமே என வெற்று பந்தாவிற்கு ஆசைப்பட வில்லையெனில், ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மிக நல்ல தேர்வு சிவில் இன்ஜினியரிங் ஆகும்.

நம்முடைய வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில் தவிர வேறு எதுவும் இல்லை. இந்தியாவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆப்ரிக்காவில், வளைகுடா நாடுகளில், மத்திய கிழக்கு அரபு நாடுகளில், அடுத்த பத்து வருடங்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் வருமானம் உள்ள பிரிவுதான் Civil Engineering..சிவில் என்றாலே வெயில், அழுக்கு, தூசிதானே என யோசிக்கும் உங்களுக்கு சிவிலின் சிறப்புகளை தொகுத்து சொல்வதுதான் இக்கட்டுரை.

சிவில் இன்ஜினியர் என்றால் வீடு கட்டுபவர், அல்லது கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒருதலைப்பட்சக் கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும்.

என்ன மாதிரி?

கட்டிடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor),

நிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor) கட்டிடம்,

இடம் வடிவம் செய்பவர் (Design Engineer),

இடப் பொறியாளர் (Site Engineer),

திட்ட மேலாளர் (Project Manager),

பாலம் கட்டும் பொறியாளர் (Bridges Engineer),

சாலைப் பொறியாளர் (Road Engineer),

போக்குவரத்துப் பொறியாளர் (Transport Engineer),

கடல்வாழ் கட்டிடம் அமைப்பவர் (Marine Construction),

பூகோள நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer),

கடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer),

ஒப்பந்த மேலாளர் (Contract Manager),

வாணிப மேலாளர் (Commercial Manager),

உற்பத்தியாளர் (Producer),

ஒப்பந்தக்காரர் (Contractor),

யோசனை டிராயிங், கட்டிட சூபர்விக்ஷன் செய்பவர் (Consultant),

இப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம்.

“Quantity Surveyor” படிப்பு பற்றி பார்க்கலாம். தகுதி B.E. Civil Engineering or DCE (Diploma in Civil with 3 years experience). . துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் ஒரு மாதத்திற்கு.

QS/QC என அழைக்கப்படும் பொறியாளர்களுக்கு என்ன வேலை?

திட்டம் சம்பந்தப்பட்ட வடிவங்களைப் படித்து சரி செய்தல் (Review),

கட்டிடம், திட்டம் சம்பந்தப்பட்ட புனரமைப்பு வேலைகளைப் படித்தல். கட்டமைப்பு வசதிகளை படித்து,

சம்பந்தப்பட்ட பதிவுகள் :சிவில் சூப்பர்வைசரின் அன்றாடப் பணிகள்

அது சம்பந்தப்பட்ட சாலைகள், தெருக்கள், கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection, போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்களின் விலை தயாரித்தல்,

மனித வளம், பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு திட்டம் தயாரிப்பது,

செய்யத்தக்க செயல்முறைகளைக் கையாளும் விதம் (Feasibility Studies) தயாரிப்பது,

ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்புகளையும், பத்திரங்களையும் பார்த்தல்,

வேலைக்குப் பேசப்பட்ட ஒப்பந்தத் தொகைகளை, வேலைகளுக்கு ஏற்ப, வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு பணம் செட்டில் செய்தல்,

பட்ஜெட் விபரங்களைத் தயாரித்தல்,

ஒப்பந்தக்காரர்களின் முடிவான கணக்குகளை செட்டில் செய்தல்,

மதிப்பீடு செய்து, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் விலையில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல்,

வேலை நடக்கும் இடங்ளுக்கு (Field Visit) சென்று திட்டங்களையும், அதன் முன்னேற்றங்களையும், மற்றபடி, , Mechanical/Electrical வேலைகளின் பிற சேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தயாரித்து யோசனை வழங்குதல்.

மேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்: B.E. Civil/Diploma Civil,

நாட்டில் உள்ள கட்டிட வேலைகளின் விபரம்,

பொருட்களின் தரம், விலை, சந்தையில் உள்ள மாற்றங்கள், ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள் தகுதிகளை அறிதல்,

மனிதவளம் செலவுகளைக் கணக்கிடுதல் வேண்டும்.

மற்ற நாடுகளான இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா பல்கலைக்கழகங்களில் Bachelor Degree in Quantity Survey சொல்லித் தருகிறார்கள். B.E. Civilபடித்து, இதே வேலையை எடுத்துக் கொள்ளலாம்.

Indian Quantity Surveyors Association (IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகளை, படிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.WEBSITE-_ (IQSA) சென்று பார்த்தால் விபரங்கள் மேலும் அறியலாம்.

வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய பணிபுரியும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர் களிடமிருந்து “கையூட்டு” பெற மாட்டார்கள். இயல்பாக இந்தத் தொழிலுக்கு நுழைபவர்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும்.

(Integrity) B.E. Civil/Diploma Civil பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது: QS சம்பந்ததப்பட்ட விபரங்களை கணினி வெப் மூலம் தெரிந்து கொள்ளவும். Charted Institute of Building (CIOB), Royal Institution of Charted Surveyors (RICS), National Institute of Construction Management and Research (NICMAR) போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்கள் மூலம் கட்டிட வேலைகள் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிடலாம்.

கொத்தனார், தச்சர், ஃபிட்டர் போன்றவர்களிடம் அடிக்கடி உரையாடி, அனுபவரீதியான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் கட்டாய மாக ஃபீல்டு விசிட் ஏற்படுத்த வேண்டும். கட்டிட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயிற்சிகளை அளிக்க வேண்டும். Building Materials, கட்டிடப் பொருட்கள், இயந்திரங்கள், இதில் உள்ள நவீன வளர்ச்சி பற்றி சந்தைக்குச் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால், என் வீட்டில் பிளஸ் 2 விற்குப் பின் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்புதானா? என்பதுதான் பெரும்பாலான ப்ளஸ் 2 மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது.

அவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து வசதிகள், கடல்வழிப் போக்குவரத்து அமைப்புகள், சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், கட்டிடங்கள் போன்றவற்றைப் பொறுத்தே அமைகிறது. இவற்றையெல்லாம் வடிவமைப்பவர்கள் சிவில் இன்ஜினியர்கள்தான். எனவே, ஒரு சிவில் இன்ஜினியராக மாறினால் சிமெண்டினாலும், செங்கலினாலும் கவிதை போன்ற வடிவங்களை உருவாக்கும் வித்தை புரிகிறது. இதனால் காலாகாலத்திற்கும் மக்கள் நம்மை ஞாபகத்தில் வைத்துப் போற்றக்கூடிய சான்றுகளை நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வாய்ப்பும் எழுகிறது. இத்துறையில் உள்ள சிறப்புப் படிப்புகள் இவைதான்.

கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியரிங்: குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்குவதே இத்துறையின் அடிப்படை அம்சமாகும். ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியர் திட்டமிடுதலில் தொடங்கி, வடிவமைத்தல், பட்ஜெட் கன்ட்ரோல், குவாலிடி கன்ட்ரோல், மெட்டீரியல் டெஸ்டிங் என்பதிலிருந்து மேற்பார்வை செய்வது போன்ற அன்றாட கட்டுமானப் பணி தொடர்புடைய வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்: கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புகள் குறித்த படிப்பாகும் இது. அழுத்தத்தைத் தாங்கும் உறுதித் தன்மை பற்றி கட்டுமான உபயோகப் பொருட்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அது போலவே அணைகள், சாலைகள், எண்ணெய் கிணறுகள், பாலங்களில் வேறு வித மான கட்டுமானப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு கட்டுமானப் பணிக்கும் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

நகர்ப்புற திட்டமிடல்: இது அர்பன் பிளானிங் அல்லது சிட்டி பிளானிங் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சண்டிகர், புனே போன்ற நகரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட நகரங்களாகும். அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் சீரிய சாலைகள், பாலங்கள், வீட்டு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வசதி போன்ற வசதிகளைப் பெறுவதற்கு உதவுவது இந்தத் துறைதான். நகர்ப்புற திட்டமிடல் படிப்புகளின் நோக்கம் என்பது நவீன, வசதியான, பாதுகாப்பான உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நகர் அல்லது ஊரை வடிவமைப்பதாகும்.

ஜியோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்: எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் என்பது அது அமைந்துள்ள பூமியின் பரப்பைச் சார்ந்துள்ளது. எனவே, மண்ணின் தன்மையே எந்தக் கட்டிடத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இவற்றைப் பற்றிப் படிப்பதுதான் ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதைப் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் தாதுக்களை கண்டறியும் தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள்.

தண்ணீர் மற்றும் மரேன் இன்ஜினியரிங்: தண்ணீர் தொடர்புடைய வேலைகளுக்காக நகரங்களில் கட்டப்படும் மாதிரிகளிலும், விவசாயம், கால்வாய்கள், அணைகள், வேஸ்ட் வாட்டர் டிரீட்மெண்ட் ஆலைகள், துறைமுகம், எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார வசதிகள் தொடர்புடைய படிப்புகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையே.

என்றும் எப்போதும் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங் துறையை மாணவர்கள் தேர்வு செய்து வாழ்வில் வெற்றி பெறுவதோடு, நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்ளலாம்.

நன்றி : பில்டர்ஸ்லைன்  மாத இதழ் 

Comments
Loading...