My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

சூடு பிடிக்கும் தேர்தல் சூடு வைக்கும் கட்டுமான பொருட்கள் விலை

Cement and Steel rates hike critical situation in construction field

0 461

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு மாதத்திற்குள் எவ்வளவு மாற்றம் சிமெண்ட் விலை மூடைக்கு  50 உயர்வு கம்பி விலை கிலோவுக்கு 10 உயர்வு டீசல் விலை ஏறவில்லை வேறு எந்த அடிப்படை பொருட்களின் விலையும் ஏறவில்லை அப்படியிருக்க ஏன் இந்த உயர்வு யாருக்கும் தெரியா புதிராகவே உள்ளது.

டீலர்கள் என்ன சொல்கிறார்கள் வரும் GST கூட்டத்தில் சிமெண்ட் வரியை குறைக்க இருக்கிறார்கள் அதனால் இப்போதே விலையை ஏற்றி வைத்துவிட்டால் பின் வரி குறையும் போதும் அதே விலை விற்கலாம் என கம்பெனிகள் விலையை உயர்த்தி விட்டன என்கிறார்கள்.

ஆனால் GST கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாமலேயே  இருக்கிறது. இதனால் பாதிப்பு என்ன தெரியுமா ?  சாதாரணமாக இந்த கோடை காலங்களின் அதிகமான அளவு கட்டுமான வேலைகள் நடக்க வேண்டிய சூழ்நிலையில் 50 சதவிகித வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இந்த விலை ஏற்றதினால்.  அரசு மற்றும் தனியார் வேலைகள் அனைத்தும் இதில் அடங்கும்.  ஏற்கனவே மணல் மற்றும் செங்கல் விலை ஏற்றதினால் 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ள கட்டுமான பணிகளின் திட்டமதிப்பீடு இந்த சிமெண்ட் மற்றும் கம்பி விலை ஏற்றதினால் இன்னும் 20 தவிகிதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.

மற்ற மாநிலங்களில் விலை குறைவாகவே உள்ள இந்த நிலையில் நமது மாநிலத்தில் மட்டும் இவ்வாறு இருப்பது சந்தேகத்தையே அளிக்கிறது.  மத்திய மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தலையிடாவிட்டால் நிச்சயம் இது கட்டுமானத்துறை வளர்ச்சியை பாதிக்கும்.

Read More :சிமென்ட் வாங்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்கள்

இவ்விலையேற்றம் உறுதியாக வரவிருக்கும் தேர்தலில் பிரதிபளிக்கும்.  இதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் நல்லது என்று  ஒரு வீட்டு உரிமையாளர் சிமெண்ட் கடையில் சொல்லி கொண்டிருந்தார் அப்போது அருகில் நின்றிருந்த கடையில் வேலைபார்ப்பவர் சொன்னார் “தேர்தல் நிதி என்கிற பேரில் கோடி கோடியாக கட்சிகள் சிமெண்ட் கம்பெனிகளிடம் வாங்கி ஓட்டுக்கு காசு என உங்களுக்கு கொடுக்குறதுனாலதான் இந்த விலையேற்றமே.  அப்புறம் எப்படி விலை ஏற்றத்தை அரசியல்வாதிகள் கேட்பார்கள் ”  என்றார்.

தலையில் சுரீர் எனபட்டது. அவர் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருந்தது.  தேர்தல் பேச்சு அடிபட்ட பிறகுதான் இந்த விலையேற்றம். அப்ப தப்பு எங்க  இருக்கு?

Read More:வீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு ?

விரல்ல மை வைக்க நாம காசு கேட்கிறோம் அவர்களோ நம்ம பாக்கெட்டுல இருந்து எடுத்து அவர்கள் பாக்கெட்டில் கொஞ்சம் வைத்து கொண்டு மீதியை நம்ம கையில் கொடுக்கின்றனர் நாமும் அதை அகல சிரித்துக்கொண்டே பெற்று கொள்கிறோம்.  அருமை !!!

Read More : வீட்டு கடன் பெறுவது எப்படி ?

Comments
Loading...