கட்டிட ஒப்பந்தங்களில் சதுர அடிக்கு விலை கணக்கிடும் முறை ஏன் தவறு? BOQ முறையே ஏன் சரியானது?

கட்டிட ஒப்பந்தங்களில் சதுர அடிக்கு விலை கணக்கிடும் முறை ஏன் தவறு? BOQ முறையே ஏன் சரியானது?

கட்டிட ஒப்பந்தங்களில் சதுர அடிக்கு விலை கணக்கிடும் முறை ஏன் தவறு? BOQ முறையே ஏன் சரியானது?

புதிய வீடு கட்ட விரும்பும் பலரும் “ஒரு சதுர அடிக்கு எவ்வளவு?” என்ற கேள்வியையே முதலில் கேட்பார்கள். இது சாதாரணமாகவும், எளிதாகவும் தோன்றலாம். ஆனால் உண்மையில், இந்த கணக்கீட்டு முறை மிகப்பெரிய தவறுகளுக்கு வழிவகுக்கும்.

இதற்குப் பதிலாக BOQ (பணியொன்றிற்கான அளவீட்டு பட்டியல்) முறையே தெளிவானது, சரியானது, மற்றும் தொழில்முறை ரீதியாக ஏற்கப்பட்டது.


1. சதுர அடிக்கு விலை (Square Feet Rate) என்றால் என்ன?

இந்த முறையில், கட்டடத்தின் மொத்த பரப்பளவு × ஒரு நிலைத்த விலை (₹2000/sqft அல்லது ₹2500/sqft) என கணக்கிடப்படும்.

எடுத்துக்காட்டு:
2000 sqft வீடு × ₹2000/sqft = ₹40,00,000

இதில் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால், இது மிக மிக பொதுவாகும். ஒரே அளவுடைய இரண்டு வீடுகள் ஆனால் உள் கட்டமைப்புகள் வேறு அப்படியிருக்கும் போது இரு கட்டிடங்களுக்கும் கட்டணங்கள் முற்றிலும் மாறுபடும்.


2. சதுர அடிக்கு விலை முறை ஏன் தவறு?

a) பணியின் தரம் மற்றும் தன்மை சேர்க்கப்படவில்லை

  • எங்கு, எப்படி கட்டப்படுகிறது? (செங்கல் கட்டிடம் அல்லது concrete )
  • எந்த தரம் கொண்ட பொருட்கள்? (முதல் தரமான பொருட்களா அல்லது அருகில் கிடைக்கும் பொருட்களா)
  • எத்தனை மாடிகள்?
  • எந்த மாதிரியான அடிதளம் ? (அடிதளம் ஆழம் எவ்வளவு ஆழம் கூடும்போது என்ன செய்ய வேண்டும் )

இவை எதையும் square feet rate கணக்கில் தீர்மானமாக கூற முடியாது.


b) என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதை விளக்கவில்லை

  • உள்ளமைப்பு வேலைகள், நீர்கசிவு மேலாண்மை, வயரிங், பிளம்பிங் ஆகியவை உள்ளதா?
  • தரமான அலங்கார வேலைகளா, சாதாரண வேலைகளா?
  • GST, தொழிலாளர் நலத்தொகை உள்ளிட்டவை உள்ளதா?

இவை அனைத்தும் தெளிவின்மை மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும்.


c) தளத்தின் தன்மை புறக்கணிக்கப்படுகிறது

  • மண் நிலை எப்படி?
  • வேலை செய்யும் இடத்திற்கு அணுகல் எப்படி?
  • உள்ளூர் சட்டங்கள், அனுமதிகள்?

இவை கணக்கில் இல்லாமல், பெரும் செலவுகள் பின்னர் வரும்.


d) செய்த வேலைக்கு பொருத்தமான கட்டணம் கிடைக்காது

கட்டிட வேலைகள் செய்வதற்கும், பணம் வழங்குவதற்கும் வேலை அளவைத் தொடர்புடைய சான்றுகள் இல்லை. எனவே செய்த வேலைக்குதான் பயணம் கொடுகிறோமா என கட்டிட உரிமையாளர்களுக்கும், செய்த வேலைக்கு பணம் கிடைக்கவில்லையே என ஒப்பந்தகாரரும் தவிக்க நேரிடும்.


3. BOQ (பணிக்கான அளவீட்டு பட்டியல்) என்றால் என்ன?

BOQ முறையில் ஒவ்வொரு வேலைக்கும்:

  • விளக்கம்
  • அளவு
  • Unit
  • Unit விலை
  • மொத்த செலவு

என்று துல்லியமாக பட்டியலிடப்படுகிறது.

உதாரணம்:

செங்கல் மதில் வேலை – 120 சதுர மீட்டர் @ ₹4,500/Cum = ₹5,40,000

இவ்வாறு ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் தனித் தனியாக கணக்கிடபடும். எனவே எதில் எந்த அளவில் வேண்டுமானாலும் திருதம் மற்றும் சரிபார்பு செய்துகொள்ளலாம்.


4. BOQ முறையின் நன்மைகள்

a) துல்லியமான மற்றும் வெளிப்படையான கணக்கீடு

ஒவ்வொரு பணியும் சரியாக குறிப்பிடப்படுகிறது. மீறல் சாத்தியம் குறைவாகும்.


b) திட்டத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கம்

பணிக்குரிய நிலை, வடிவமைப்பு, தரம் அனைத்தும் BOQ-ல் சேர்க்கப்படுகிறது.


c) தணிக்கை மற்றும் கணக்காய்வு சாத்தியம்

வேலை நடக்கிற அளவுக்கு பணம் வழங்கலாம். இது நேர்மையாக பணம் செலுத்த உதவும்.


d) மறுசெய்திகள் (Variations) எளிதாக கையாள முடியும்

வாடிக்கையாளர் முடிவுகளை மாற்றினால், BOQ-யில் அந்த ஒரு வேலை மட்டும் மாற்றப்படும். முறையே பாதுகாக்கப்படும்.


5. முடிவு: BOQ மட்டுமே தொழில்முறை வழி

Square Feet Rate முறையில்:

  • அதிகமா பணம் கொடுக்க நேரிடும்
  • வேலை தரம் குறைவாகும்
  • நம்பிக்கை குறையும்

ஆனால் BOQ முறையில்:

  • பணம் எவ்வளவு செலவாகும் என்பது தெளிவாக தெரியும்
  • வேலைக்கு உரிய தொகை வழங்கப்படும்
  • எந்த கட்டத்தில் என்ன நடக்கிறது என்பது கணக்கில் இருக்கும்

சுருக்கமான ஒப்பீட்டு அட்டவணை:

அம்சம்சதுர அடிக்கு விலைBOQ முறை
துல்லியம்குறைவுஅதிகம்
வெளிப்படைத்தன்மைஇல்லைஉள்ளது
திட்ட தகுதிகள்இல்லைஇருக்கிறது
கணக்காய்வுசிரமம்எளிது
பணம் வேலைக்கு ஏற்பஇல்லைஉள்ளது
சண்டைகள்அதிகம்குறைவு

கட்டிடதுறை தொழில்முறைக்கு செல்வதென்றால் — BOQ முறையையே தேர்ந்தெடுக்க வேண்டும்.


தயார் பில்டிங் கட்டிடத்திட்டங்களுக்கும், வாடிக்கையாளர் நம்பிக்கைக்கும் BOQ மட்டுமே பாதுகாப்பான வழி.
Square feet rate என்பது போக்கு மட்டுமே. அதை தாண்டி, பிழையில்லா திட்டத்துக்கான கட்டுமானம் செய்வதற்கான வழி — BOQ தான்.

Er.S.Karthikeyan

Secretary,

Engineers Club Tamilnadu

Theni Center