My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

அனைவருக்கும் வீடு திட்டம் (ஆவாஸ் யோஜனா )- Awas Yojana

Awas yojana scheme explained in tamil

0 318

Get real time updates directly on you device, subscribe now.

‘’அனைவருக்கும் வீடு” என்கிற உயர்ந்த நோக்கத்தோடு மாண்புமிகு பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியால் 2015ம் வருடம் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா”. ‘சமூகத்தில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 2022ம் வருடத்திற்குள் சொந்தமாக வீடு கொடுக்க வேண்டும்’ என்பதே இந்த திட்டத்தின் லட்சியம். இந்த திட்டத்தை செயல்படுத்த, இந்திய அரசு 439.22 பில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கி இருக்கிறது.

யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?

 

இந்த திட்டத்திற்காக விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் மிக கடுமையானவை. அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.  அந்த விதிமுறைகளுக்கும், அரசாங்கம் வகைப்படுத்தியிருக்கும் படிநிலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமே விண்ணபிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.  அவற்றைப் பார்ப்போம்…

  1. பொருளாதாரத்தில் பின்தங்கிய வகையினர் – வருட வருமானமாக 3 லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் இந்த வகையில் அடங்குவார்கள்
  2. குறைந்த ஊதியம் பெறுபவர் – வருட வருமானமாக 3 லட்சத்தில் இருந்து 6 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் இந்த வகையில் அடங்குவார்கள்.
  3. நடுத்தர வருமானம் பெறுபவர்கள் 1 மற்றும் 2 வகையினர் – வருட வருமானமாக 12 லட்சத்திற்கும் கீழும், வருட வருமானமாக 18 லட்ச ரூபாய்க்கு கீழும் சம்பாதிப்பவர்கள் இந்த வகையில் அடங்குவார்கள்.
  4. சிறுபான்மைப் பிரிவு- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களோ அல்லது பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களோ, தங்கள் சாதி/ அடையாள சான்றிதழைக் கொடுத்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  5. பெண்கள் – பொருளாதாரத்தில் பின்தங்கியவராகவோ அல்லது  குறைந்த ஊதியம் பெறுகிறவராகவோ, அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கும் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளி, கணவன், மனைவி, குழந்தை என்று ஒரு குடும்பமாக இருக்க வேண்டும். இதில் குடும்பத் தலைவராக இருக்கும் ஆணின் வயது 70க்கு அதிகமாக இருக்கக்கூடாது.

மிக முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிக்கோ, அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமாக வீடு எதுவும் இருக்கக் கூடாது.

எவ்வளவு கடன் உதவி பெற முடியும்?

 

ஒவ்வொருவரும் அவர்களது வருமானத்தைப் பொறுத்து கிடைக்கும் கடன் தொகை மாறுபடும்.

குறிப்பு பொருளாதாரத்தில்

பின்தங்கிய 

வகையினர்

மற்றும் குறைந்த

ஊதியம் 

பெறுபவர்

நடுத்தர 

வருமானம்

பெறுபவர்கள்

வகை 1

நடுத்தர 

வருமானம்

பெறுபவர்கள்

வகை 2

வருட வருமானம்
ரூபாய் 3 லட்சம்
மற்றும்ரூபாய்
6 லட்சம் வருட
வருமானம்
பெறுபவர்கள்
ரூபாய் 12
லட்சம்வருட
வருமானம்
பெறுபவர்கள்
ரூபாய் 18 லட்சம்
வருட வருமானம்
பெறுபவர்கள்
வட்டி மானியம்
(வருடத்திற்கு)
6.50%
4%
3%
கடன் முடிவடையும்
காலம்(வருடங்களில்)
20
20
20
வட்டிமானியத்தோடு
கூடிய கடன்தொகை
6 லட்சம்
9 லட்சம்
12 லட்சம்
அதிகப்பட்சவசிப்பிட
 அளவு
60 சதுர மீட்டர்கள் 90 சதுர மீட்டர்கள் 110 சதுரமீட்டர்கள்

 

மக்களுக்கு வீட்டு உதவி திட்டங்களுக்கான கடன் உதவிகள் இந்திய அரசால் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்த திட்டம் இதற்கு முன் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ‘இந்திரா ஆவாஸ் யோஜனா” என்ற பெயரில் செயல்படுத்தப் பட்டது.

 

இந்த திட்டம் எந்த வகையில் வித்தியாசமானது?

 

சில வீட்டு மனை (ரியல் எஸ்டேட்) தொழில் செய்பவர்களால் முன்வைக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நடுத்தர மற்றும் மேல் வர்க்கத்தினரை மனதில் வைத்து செயல்படுத்தப் படுபவை. அந்த திட்டங்களில் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான திட்டம் எதுவும் இருக்காது.  காலம் காலமாக வீட்டு மனை தொழில் செய்பவர்கள் கட்டிக் கொடுக்கும் வீடுகள், அதிகமான வசிப்பிட இடத்தைக் கொண்டவை. அதிக பொருட் செலவு பிடிக்கும் கட்டுமானப் பொருட்களால் கட்டப்படுபவை.

தற்போது இந்திய அரசு கொண்டு வந்து இருக்கும் இந்த திட்டத்தால், வீட்டு மனை தொழில் செய்பவர்களின் கவனம் நடுத்தர மற்றும் மேல் வர்க்கத்தினர் மீது இருந்து, உண்மையிலேயே அத்தியாவசியமாக வீடு தேவைப்படுபவர்களின் மீது திரும்பியிருக்கிறது. அவர்களுக்கு குறைந்த செலவில், குறைந்த இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்க வைத்திருக்கிறது.

Comments
Loading...